ஏன் Hot Springs, Arkansas, USA 63-0626 1நன்றி சகோ. ஜான்சன். மாலை வணக்கம் நண்பர்களே. இன்று இரவு இங்கே இருப்பது மகத்தான விசேஷித்த காரியமாய் இருக்கிறது. முதல் காரியம், ஆர்க்கன்சாஸிற்கு திரும்பி வந்தது. மற்றொன்று கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு வந்தது. அநேக நாட்களுக்குப் பிறகு நாள் பங்கெடுக்கும் கேம்ப் மீட்டிங் இது என்று நம்புகிறேன். உங்களுடன் துவங்குவதற்கு நான் அழைப்பை பெற்றிருந்தேன். நாங்கள் இப்பொழுதுதான் உள்ளே வந்தோம். உங்களுக்கு ஒரு மகத்தான நேரம் இந்த கூட்டத்தில் உண்டாயிருந்தது என்று கேள்விப்பட்டேன். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். என் மகனுடன் சற்று முன்னர் சாலையில் வரும் போது, பல வருடங்களுக்கு முன்பு முதன் முறையாக ஆர்க்கன்சாஸிற்கு வந்ததைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டு வந்தோம். நான் முதலாவது துவங்கின போது ஒரு சுவிசேஷ முறையிலான கூட்டங்கள் ஆர்க்கன்சாஸிலிருந்து துவங்கினது. அதன்பிறகு உலக முழுவதும் ஏழு முறை சுற்றிச்சென்று இப்பொழுது மறுபடியுமாக ஆர்க்கன்சாஸிற்கு வந்துள்ளது. ஒரு கிழிந்த காசு எப்பொழுதுமே திரும்ப வந்து விடுகிறது போல தான். நான் பூகிக்கிறேன் - அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எல்லா இடங்களிலும் நான் “ஆர்க்கன்ஸாசிலிருந்து யாராவது வந்திருக்கிறார்களா?” என்று கேட்பேன். எல்லா இடங்களிலும் இருப்பது போல, ஆர்க்கள்ஸாசிலும் எனக்கு எப்பொழுதும் நண்பர்கள் உண்டு. நான் எப்பொழுதும் சொல்வது போல, சில உண்மையான இருதயங்களை, நான் விசுவாசிக்கிறேன். ஆர்க்கன்சாஸிலுள்ள பழைய நீல நிற சட்டைகளுக்கு அடியில் எப்பொழுதும் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையான இருதயங்களாகிய, இனிமையான ஜனங்களாகிய உங்களை நான் நேசிக்கிறேன். 2உங்களுடன் இருக்கும் படிக்கு இன்று இரவு ஆர்கன்சாஸிற்கு மீண்டும் வரும்படி கிடைத்த சந்தர்ப்பத் திற்காக தேவனுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் இன்னும் இரண்டு தினங்கள் இந்த கன்வென்ஷன் உண்டு என நான் நினைக்கிறேன், உள்ளே வருவதற்கான சந்தர்ப்பம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள என்னுடைய அன்பை வெளிப்படுத்தவும், ஜனங்களாகிய உங்களிடமும் மற்றும் இங்கேயுள்ள அருமையான சகோதரரிடமும் ஐக்கியம் கொள்ளவும் எனக்கு தருணம் உண்டாயிருக்கின்றது. இங்குள்ள பலரையும் எனக்கு தெரியாது. நான் சுற்றிலும் பார்த்து எனக்கு தெரிந்த ஒருவரைக் கண்டேன். சகோ. ஜாக் மூர் சகோதரி மூர் அவர்களை மட்டும் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. மேலும் நாங்கள் உள்ளே இருப்பதற்காக நிச்சயமாகவே மகிழ்ச்சி அடைகிறோம். நாள் முழுவதும் நீங்கள் இங்கே இருப்பதால் அதிகமாக களைப்பாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். தேவனை அவர் செய்த நன்மைகளுக்காகவும், அவர் எவ்வளவு அற்புதமானவராயிருக்கிறார் என்பதற்காகவும் நாம் தேவனைத் துதித்து ஸ்தோத்தரித்துக் கொண்டே யிருந்தாலும் நாம் ஒரு போதும் சோர்வடைவதில்லை. நாள் முழுவதும் கடந்து மேலும் இரவு வரும் போதும் நான் இங்கே வருகிறேன். மேலும் நானோ அதிக நேரம் பிரசங்கிக்கக் கூடிய ஒரு ஊழியக்காரனாக இருக்கிறேன். ஆனால் இப்போது அவ்வாறு நாம் செய்யப்போவதில்லை என்று நான் நினைக்கிறேன். சந்தேகமின்றி இந்த கன்வென்ஷனில் நாள் முழுவதும் சிறந்த பேச்சாளர்களின் பிரசங்கங்களை கேட்டிருக்கிறீர்கள். இந்த சிறந்த பேச்சாளர்களுக்கு முன்பாக நான் இங்கு நிற்கும் போது, என்னை நான் மிகவும் சிறியவனாக கருதுகிறேன். இங்கே நின்று ...... 3ஊழியக்காரர்களில் ஒருவர் என்னுடைய கரங்களை குலுக்கி, இந்த கூடாரத்தில் இது உங்களுடைய முதல் ஆராதனை என்று கூறினார். இந்த ஆலயத்தில் அல்லது மற்ற ஏதோ ஒன்று எனக்கு சரியாக நினைவில்லை . ஒரு புதிய சபைக்கு வந்து தேவனை துதிக்கவும் மகிமைப் படுத்தவும் கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர் களாக இருக்கிறோம். அது எவ்வளவு மகத்தான காரியம். நாம் இப்பொழுது தான் திரும்பி சென்றோம் . . . இல்லை திரும்பி செல்லவில்லை ...... பிள்ளைகளின் பள்ளி விடுமுறைக்காக திரும்பி வந்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் அரிசோனா, டூஸ்ஸானில் வசித்து வருகிறோம். மேலும் அங்கு மிகவும் புழுக்கமான சீதோஷண நிலை இருக்கும். ஆனால் ஈரப்பதம் அதிகமாய் இருப்பதனால் அங்கிருப்பதை விட சற்று கூடுதலான வெப்பநிலை காணப்படுகிறது. அங்கு இருந்து வந்த நம்மை, இது தளர்த்தி விடுகிறது. 4கடந்த ஞாயிறன்று நாம் வீட்டில் இருக்கும் போது, முதல் ஆராதனை உண்டாயிருந்தது. கர்த்தராகிய இயேசு தம்முடைய மகத்தான அன்பின் ஊழியத்தையும், ஜனங்களின் மத்தியில் அவரது வல்லமையையும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறதையும் நாங்கள் கண்டோம். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ஆர்க்கன்சாஸில் நான் பிரசங்கித்த சுவிசேஷ மானது இன்றைக்கும் அதே விதமாகத் தான் இருக்கின்றது என்று நான் விசுவாசிக்கின்றேன். அது மாறவே மாறாது. அது கிறிஸ்துவாகும். ஞாயிறன்று சபையில் ஏதோ ஒன்று சம்பவித்தது. சுற்றிலும் பார்த்த போது அற்புதத்தை பெற்றுக்கொண்ட அந்த நன்மதிப்பு பெற்ற சகோதரனை காண நேர்ந்தது. 5கவனியுங்கள், நாம் எல்லோரும் கர்த்தராகிய இயேசுவைக் குறித்து அளவளாவிக் கொண்டே அதிகதிக மாக பேசிக் கொண்டேயிருக்க (brag) மகிமைப்படுத்த விரும்புகிறோம். அவ்விதமாகச் செய்ய நாம் விரும்பு கிறோம். ஒரு முறை ஒரு ஸ்திரீ என்னிடம், ஒரு குறையை மட்டும் கண்டுபிடித்ததாக கூறினாள். “நீர் இயேசுவைக் குறித்து அதிகளவில் ஜம்பப் பேச்சு (brag) பேசுகிறீர்” என்றாள். அதற்கு நான், “இயேசுவைக் குறித்து ஜம்பப் பேச்சு பேசுகிறேன் என்பது தான் என்னிடமுள்ள ஒரே தவறு என்றால் நான் நிச்சயமாக பரலோகத்திற்குச் செல்வேன்” என்றேன். மேலும் இயேசு தெய்வீக தன்மையுடையவர் என்பதை அவள் எண்ணவில்லை என்றும், அவர் வெறும் மனிதன், தத்துவஞானி ஒரு தீர்க்கதரிசி அல்லது அந்த வரிசையில் ஏதோ ஒன்று என்று கூற முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அவர் தேவன் என்று நான் சொன்னேன். ஆகவே நாங்கள் ..... நான் “ஓ, உன்னால் அப்படி செய்ய முடியுமென்று நான் விசுவாசிக்கவில்லை” என்றேன். அவள் “அவர் வெறும் மனிதன் தான் என்பதை என்னால் நிரூபிக்க முடியும்” என்றாள். அவள் “அவர் தேவன் அல்லவென்று என்னால் உங்களிடம் நிரூபிக்க முடியும் என்றாள். நான் “இப்பொழுது அவர் மனிதன் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அவர் மானிடத்தன்மை தெய்வீகம் ஆகிய இரண்டையும் கொண்டவராக இருந்தார்,'' என்றேன். அவள் ”அவரால் தெய்வீகமான வராக இருந்திருக்க முடியாது“ என்றாள். நான் ”ஓ, அவர் தெய்வீகமானவராக இருந்தார், அப்போதும் அவர் தெய்வீகமானவராகவே இருந்தார்.“ என்றேன். 6அவள் “ஓ அவரால் அப்படி இருக்க முடியாது, உங்கள் சொந்த வேதாகமத்தைக் கொண்டு நான் அதை நிரூபிப்பேன்” என்றாள். நான் “சரி என்றேன்” மேலும் அவள் “பரி. யோவான் 11-ம் அதிகாரத்தில் லாசருவின் கல்லறைக்குப் போகும் வழியிலே இயேசு அழுதார்”, என்று வேதாகமம் கூறுகிறது“ என்றாள். நான் சொன்னேன், ”நல்லது, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?“ அவள், “அப்படியானால் அவர் அழுதிருப்பா ரென்றால், அவர் தேவனல்ல என்று இது நிரூபிக்கிறது'' என்றாள். அப்போது நான், “பெண்ணே , உன்னுடைய வாதமானது, தீனியில்லாமல் மரித்து ஒரு நிழலைப் போல உருவில்லாமல் போன ஒரு கோழியை எடுத்து அந்த கோழியைக் கொண்டு செய்யப்படும் ஒரு குழம்பு எப்படி திடமாக இல்லாமல் தண்ணீரைப் போல் இருக்குமோ அத் தண்ணீரை விட மிகவும் திண்மையற்றதாக அமைந்திருக் கிறது. அதை விட உனக்கு அதிகம் தெரியுமோ” என்றேன். நான் சொன்னேன் “லாசருவினுடைய கல்லறைக்குச் சென்று அழுத போது அவர் மனிதனாக இருந்தார். அது சரி ஆனால், தன்னுடைய சிறிய தோள்களை மேலே உயர்த்தி ”லாசரு வே - வெளியே வா“ என்ற போது நான்கு நாட்களாக மரித்து போயிருந்த ஒரு மனிதன் தன்னுடைய காலில் எழுந்து நின்று, மறுபடியும் ஜீவனோடு இருந்தான். அப்பொழுது அவர் மனிதனை விட மேலானவராக இருந்தார். அவர் இன்னும் அப்படித்தான் இருக்கிறார் என்று இப்போதும் நான் விசுவாசிக்கிறேன்”. 7ஞாயிறன்று பேசிக்கொண்டிருந்த போது நாங்கள் ...... கூடாரத்திற்குள் இருக்கும் மக்கள் திரும்பி ஒருவருக் கொருவர் கரங்களைக் குலுக்கும்படி நான் மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு அருமை நண்பர் இருந்தார். நான் அவரை அப்பொழுது நேசிக்க கற்றுக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் சபைக்குள் அவர் வந்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி ஒரு பதிவு செய்யப்பட்ட நர்ஸ். மேலும் அவர் ஒரு ஆங்கிலேயனாய் இருந்தார். அவள் நார்வே நாட்டைச் சார்ந்தவள். அது எப்படி சம்பவித்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் எப்படி இருப்பினும் அவர்கள் இருவரும் அருமையான ஜனங்கள். இந்த சகோதரன் ஏதோ ஒரு சிறிய தவறான கருத்தை தன்னுடைய இருதயத்தில் கொண்டிருந்தார். அவர் ஒரு மிகச்சிறந்த கிறிஸ்துவ மனிதர். புத்திசாலியானவர். அவர் உலகம் சார்ந்த வரவு செலவு கணக்குப் பார்க்கும் வேலையை செய்து கொண்டிருந்தார். அவர் வந்த போது அவருக்கு மாரடைப்பு வந்தது. அப்பொழுது அவர் தரையின் மீது விழுந்த இறந்து போனார். மேலும் அவருடைய மனைவி ஒரு நர்ஸாக இருந்ததால் அவரை உடனடியாக தூக்கி இருதயத்தின் நாடி துடிப்பைப் பார்த்த போது “அவர் மரித்து விட்டிருந்தார்” மேலும் அவருடைய முகத்தை நோக்கின போது உண்மையாகவே இருண்டிருந்தது. அவருடைய கண்கள் பின் புறமாகத் திரும்பியிருந்தது. அவருடைய கண்கள் மூடியிருக்கவில்லை, ஆனால் அவருடைய கண்கள் உந்தி வெளியே வந்திருந்தது. நான் மேடையிலிருந்து இறங்கி வந்து சபை யோரை அமைதிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன். கணவனுடன் அவள் இருந்த நிலையில் அநேக ஜனங்கள் அந்த சகோதரிக்கு உதவ முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். யாரோ ஒருவர் அவருடைய தலைக்கு மேலாகவோ அல்லது கீழாகவோ ஏதோ ஒன்றை வைக்க முயன்றார். 8அவருடைய இருதயத்தை தொட்டு, கரத்தில் நாடியை பார்த்த போது ஒரு மரத்துண்டைப் போல, நாடித் துடிப்பு ஒன்றும் அங்கிருக்கவில்லை . அதன் பிறகு நான் முழங்கால் படியிட்டு “கர்த்தராகிய இயேசுவே, சகோ.வே அவர்களுக்கு அவருடைய ஜீவனை திரும்ப அளிக்குமாறு உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று ஜெபித்தேன். அப்பொழுது அவருடைய இதயம் நான்கு அல்லது ஐந்து முறை அடித்து அப்படியே மீண்டுமாக வழக்கமான முறையில் அடிக்கத் துவங்கினது. அவர் குதித்தெழுந்து பேச முயற்சித்தார். அவரால் பேச முடியவில்லை . இருதயம் நின்று விடும் போது இரத்த ஓட்டமும் நின்று விடுமல்லவா. அவரது இரத்த ஓட்டம் சீரடைய சிறிது நேரம் பிடித்தது. என்னுடைய பெயரை அவர் அழைப்பதை என்னால் கேட்க முடிந்தது. பின்னர் நான் மேடைக்கு சென்று விட்டேன். சகோ. வே. (Way) இந்த ஜனங்கள் அந்த மனிதன் யார் என்பதைக் காண நீங்கள் எழுந்து நிற்பீர்களா என வியப்புறுகிறேன். இறந்து போன அந்த மனிதன் இதோ, (சபையார் களிகூறுகின்றனர்-ஆசி) சகோதரி. வே. அவருடைய மனைவி அங்கே அவருடைய நாடித்துடிப்பை பார்த்த நர்ஸ் பாருங்கள் அவரை ... ஆகவே தான் நான் .... இந்த காரியங்களை விசுவாசிக்காத ஜனங்களுக்கு அது மிகவும் விநோதமாக தோன்றும். ஆனால் மரித்தவர்களை கர்த்தராகிய இயேசு எழுப்பினதை நான் அநேகந்தரம் கண்டிருக்கிறேன். அது நமக்கு புதிதான ஒன்றல்ல. ஆகவே நாம் அப்படி நினைப்பதில்லை. ஆகவே இயேசுவைக் குறித்து அதிகளவில் பேசிக்கொண்டேயிருப்பது அருமை யான ஒன்றே என நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் எதைக்குறித்து அதிகளவில் ஜம்பமாக பேசுகிறீர்களோ அதில் உண்மை இருக்க வேண்டும் என்று நான் நினைக் கிறேன். ஆகவே நாங்கள் அவரை கண்டிருக்கிறோம்.... நானும் அவரை கண்டிருக்கிறேன். கடந்த பதினைந்து வருடங்களாக அநேக தவறமுடியாத பிழையற்ற காரியங்கள் செய்யப்படுவதும், மரித்தோரை உயிரோடே எழும்ப அவர் செய்ததையும் நான் கண்டிருக்கிறேன். 9மிகச் சிறப்பாக மெக்ஸிகோவில் நடந்த ஒன்றில் அங்கே மெக்ஸிகோ நகரத்தில் நானும் சகோ. மூரும் நின்று கொண்டு இருந்தோம். ஒரு காலை 9.00 மணிக்கு சிறு குழந்தை மருத்துவரின் அறையில் நிமோனியாவினால் மரித்து விட்டிருந்தது. அந்த சிறிய பெண், நாங்கள் அவளுக்கு உதவ முடியவில்லை .... ஆம், சுகமளிக்கும் ஆராதனைக்கென அந்த மனிதன் ஜெப அட்டைகள் முழுவதும் வினியோகித்து முடித்திருந்தார். அங்கே ஜெப அட்டைகள் ஒன்றுமில்லை ..... நான் நினைக்கிறேன். சுமார் 25 வயதுள்ள அந்த சிறிய ஸ்பானிஷ் சகோதரி, அங்கே மழை பெய்து கொண்டிருந்த போது ஒரு போர்வையால் அந்த சிறிய இறந்து போன குழந்தையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். இதற்கு முந்தைய இரவு என்னுடைய தகப்பனாரின் வயதையுடைய ஒரு மனிதன், சுமார் 70 வயதை உடைய குருடான ஒரு மனிதன் நான் அவருக்க ஜெபித்த போது அவர் பார்வையை பெற்றுக்கொண்டார். அந்த இரவு மேசை மீது இவ்வளவு அகலமாக இரண்டு அல்லது மூன்று அடி உயரத்திற்கு துப்பட்டாக்களும், தொப்பிகளும் மேலும் பழைய ஆடைகளும் வைக்கப்பட்டு இருந்தது. அந்த சிறிய பெண்மணி அங்கே வர முயன்று கொண்டிருந்தாள். “அப்பா நான் 300 வாயிற்காப் போன்களை நிறுத்தி இருந்தேன். ஆனால் அவர்களால் அந்த ஸ்திரீயை தடுத்து நிறுத்த முடியவில்லை . அவள் ஒரு நீல நிறப்போர்வைக்குள் தன்னுடைய இறந்த குழந்தையை வைத்திருக்கிறாள் ” என்று என் மகன் பில்லிபால் சொன்னான். நான் சொன்னேன், நல்லது. நான் சகோ.ஜாக்மோரிடம் “கீழே இறங்கி செல்லுங்கள்” என்றேன். 10சகோ. ஜாக்மோர் அவர்களுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு, நாங்கள் பார்வைக்கு ஒரே மாதிரியாக இருப்போம் என்று நான் சொல்லவரவில்லை. ஏனென்றால் அவர் நல்ல அழகான மனிதர். ஆனால் சகோ. மோர்க்கும் எனக்கும் ஒரு காரியம், எங்கள் இருவருடைய தலைமயிரும் ஒரே மாதிரியாக இருக்கும். (சகோதரன் பிரன்ஹாமும் சபையாரும் சிரிக்கின்றார் - ஆசி) எங்கள் இருவருக்கும் அநேக ஒற்றுமைத் தன்மைகள் உண்டு. ஆகவே அவள் என்னை அடையாளம் கண்டிருக்கமாட்டாள் என்று நான் நினைத்தேன். நான் மேடைக்கு வர என்னைக் கயிறுகளால் கீழே இறக்கினார்கள். ஆகவே அந்த சிறு குழந்தைக்காக ஜெபிக்கும்படி அவரை கீழே அனுப்பினேன். நான் நினைத்தேன். 'நல்லது அவர்களால் முடியாது.... அவள் ஒரு போதும் வித்தியாசத்தை அறிய முடியாது“. 11நான் திரும்பவும் பிரசங்கிக்கத் தொடங்கினேன். மேற்கு கோஸ்ட்டில் இருந்து வந்திருந்த சகோ. எபினோசாவை இங்குள்ள சகோதரர்கள் அனைவருக்கும் தெரியும். அவர் என் பேச்சை மொழி பெயர்த்துக்கொண்டிருந்தார். அக்கூட்டம் அங்கே மெக்ஸிகோ சிட்டியில் உள்ள காளைகளை அடக்கும் விளையாட்டரங்கில் நடை பெற்றுக் கொண்டிருந்தது. நான் ஜனக்கூட்டத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு சிறிய மெக்சிகன் குழந்தை என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதை நான் தரிசனத்தில் கண்டேன். ஆகவே நான், “அந்த ஸ்திரீயை இங்கே கொண்டு வாருங்கள்” என்று சொன்னேன். “அந்தச் சிறிய இறந்து போன, விரைத்துப் போய் குளிர்ந்த நிலையிலிருந்த உருவத்தின் மீது என் கையை வைத்தேன், அவனுடைய கால்கள் உதைக்க துவங்கின, மேலும் அவன் அழத் தொடங்கினான். அங்கே அவன் உயிரோடு இருந்தான் இந்த சம்பவத்தை வெளியே சொல்வதற்கு முன், மருத்துவரிடம் விசாரித்து, வாக்குமூலம் பெறுவதற்காக எஸ்பினோசாவை அனுப்பினேன். அந்த மருத்துவரின் சான்றிதழில் அன்று காலை 9.00 மணிக்கு தன்னுடைய அலுவலகத்தில் குழந்தை மரித்து விட்டது என்று எழுதியிருந்தார். ஆனால் இச்சம்பவம் இரவு 10.30 மணிக்கு நடந்தது. அந்த குழந்தை இன்னும் உயிரோடுள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. புகழ்ச்சியும், மகிமையும் தேவனுக்கே. 12நடந்த அநேகக் காரியங்களை பார்க்கும் பொழுது, சகோ. வேயைப் பற்றி மாத்திரம் சொன்னால் போதாது. எனவே சத்தியம் சத்தியமே. தேவன் வெறுமனே காரியங்களை செய்வதில்லை . . . அக்காரியங்கள் அறியப்பட வேண்டு மென்றும், தாம் ஜனங்களை நேசிக்கின்றவர் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென தேவன் விரும்புகிறார். கர்த்தரின் கிருபையால் சகோ. வே. இன்றிரவு ஜீவனோடு நம் மத்தியில் அமர்ந்திருக்கிறார். அதற்காக நாம் நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். காம்ப் மைதானத்தில் உள்ளே வந்து இந்த மகத்தான வேலையை தடை செய்ய விரும்பவில்லை. இன்று மதியம் பில்லி ''உண்மையான பழைய பெந்தகோஸ்தே அனுபவத்தைப் பற்றி கூறுவீர்களே', “அங்கு செல்லும் வரை காத்திருங்கள். அவர்களிடம் 50 வருட அனுபவம் உள்ளது போல அவர்கள் பாடுகிறார்கள். நான் “ அவர்களில் சிலருக்கு 50 வருட அனுபவம் இருக்கும் என யூகிக்கிறேன்” என்றேன். 13இப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்கு வருவதற்கு எனக்குப் பிரியம். நாம் ஒவ்வொருவருக்கும் அப்படியே என நான் நம்புகிறோம். நாம் இதற்குள் சரியாக உள்ளே செல்லுவோம்....... நான் எப்பொழுதும் சொல்லும் மீன்பிடித்தலைப் பற்றிய ஒரு சிறுகதை. மலையின் மேல் வடக்கில் உள்ள நியூஹாம்ப்ஷையரில் மலையின் உச்சிக்கு போகும் வழியில் எனக்கு ஒரு சிறிய குடில் தயாராக இருந்தது. ஓ, அந்த சிறிய குடில், அரசாங்கம் அந்த சிறிய குடிலைத் தந்திருந்தது. ஒரு புதருக்கு அடியில் நிறைய குளத்து மீன்கள் இருக்கும். ஒரு ஸ்தலத்தை நான் கண்டுபிடித்தேன். அங்கே - அங்கே ஒரு அலரி போன்ற செடி இருந்தது. ஒவ்வொரு முறை நான் தூண்டிலிடும் போதெல்லாம் மீன் அலரிபோன்ற செடிகளுக்குள் சென்று விடும். ஆகவே காலையில் எழுந்து, அங்கு விரைந்து சென்று அலரி போன்ற செடியை வெட்டி வீழ்த்து வேன் என்று நினைத்தேன். நான் ஒரு மீனைக் கொல்வேனாகில் நான் அதை சாப்பிடுவேன் அல்லவென்றால் அதைத் திரும்ப விட்டு விடுவது என தீர்மானித்தேன். ஆகவே அந்த வாரம் முழுவதும், இவற்றையெல்லாம் செய்துக் கொண்டு, நான் மாத்திரம் அங்கே மேலே தனித்திருந்தேன். 14அன்று காலை நான் வெளியே சென்று திரும்பும் வழியில் ஒரு தாய்க் கரடியும், இரண்டு கரடி குட்டிகளும் என்னுடைய கூடாரத்திற்குள் நுழைந்தன. அதில் இருந்த பொருட்களை நாசமாக்குதலைப் பற்றி பேசுவீர்களே, அங்கே அவைகள் உண்மையாகவே நாசமாக்கி இருந்தது. எல்லாவற்றையும் அவைகள் தாறுமாறாக்கிப் போட்டிருந்தது. நான் திரும்பி வந்த போது ஒரு சத்தத்தைக் கேட்டேன். நான் சுற்றிலும் பார்த்தபோது சிறு புதரிலிருந்து அந்த சத்தம் வந்து கொண்டிருந்தது. வயதான தாய்க் கரடிக்கும் அதன் குட்டிகளுக்கும் இனிமையான நேரம் உண்டாயிருந்தது. தாய்க் கரடி என்னை பார்த்த போது, அது அங்கிருந்து ஓடி குட்டிகளை சத்தமிட்டு அழைத்தது. ஒரு குட்டி மாத்திரம் வந்தது. ஆனால் மற்றொரு குட்டி வரவில்லை. அந்த சிறிய குட்டி உயரமாக குதித்துக்கொண்டிருந்தது. அது இப்படி அமர்ந்து கொண்டிருந்தது. “இந்த சிறிய குட்டி எதை குறித்து இவ்வளவு ஆர்வமாக இருக்கிறது?” என்று நான் நினைத்தேன். 15நான் அங்கே அடைந்து அங்கிருந்து வெளியேறு, அங்கிருந்து வெளியேறு“ என்று சொன்னேன். அந்தக் கரடி குட்டி அங்கேயே இருந்தது. நான் அந்த தாயைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த கரடிக்குட்டிகளை துன்புறுத்தினால் தாய் கரடி பிராண்டி விடும் என்று உங்களுக்குத் தெரியும். அங்கே அருகாமையில் ஒருமரம் இருந்தது. என்னுடைய பழைய துரும்பு பிடித்த கைத்துப்பாக்கி கூடாரத்தில் இருந்தது. அது ஒரு வேளை உடைந்திருக்கும். எப்படியாயினும் அந்த தாயைக் கொன்று, இரு குட்டிகளையும் அனாதையாக்க நான் விரும்பவில்லை. அந்த மரத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த சிறு குட்டி எதனால் ஈர்க்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கச் சென்றேன். எனக்கு சர்க்கரை மாவுடன் சேர்த்து செய்யும் அடையை பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியும். நானும், நீங்கள் அனைவரும் தெற்கத்தியர்கள், அப்படித்தானே? (சபையார் “ஆமென்' என்கின்றனர் - ஆசி) மாவில் சுட்ட எண்ணெய் பணியாரங்கள் என்று இங்குள்ளவர்கள் சொல்வீர்கள் அல்லவா? நான் அவைகளை உண்மை யாகவே விரும்புகிறேன். மெத்தோடிஸ்ட் காரியமானது என்னைக் குறித்து அதிகம் கிடையாது ; நான் சர்க்கரைப் பாகுகள் அதிகமாக ஊற்றுவதில் எனக்கு மிகப் பிரியம். நான் அவைகளுக்கு ஞானஸ்நானமே கொடுப்பேன், அவைகளின் மீது ஊற்றி விடுவேன். இங்குள்ள இடங்களில் நீங்கள் செய்வது போல நான் அவைகளின் மீது கொஞ்சம் கொஞ்சமாக தெளிப்பதில்லை. நான் அந்த அடைகளின் மீது அதிக பாகை ஊற்றி இரண்டையும் கலப்பேன். 16என்னுடைய வாளியில் அரை காலன் அளவு நல்ல பழைய சர்க்கரைக் குழம்பு இருந்தது. இந்த சின்ன கரடி மேலே ஏறி, என்னுடைய சர்க்கரைச் சாறை அருந்தி மகிழ்ச்சியடைந்துக் கொண்டிருந்து. நான் மூலையின் அருகில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அது தன்னுடைய சிறிய கால்களை வாளிக்குள் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. அந்த தேனை எப்படி வெளியே எடுப்பது என்று அதற்குத் தெரியவில்லை . ஆகவே அது தன் கால்களை தேனில் தொட்டு பின்னர் வெளியே எடுத்து, அதை நக்கிக்கொண்டிருந்தது. முடிவில் அது என்னைப் பார்த்த போது, அதனால் என்னைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் தலையிலிருந்து சர்க்கரை தேன் வழிந்து கொண்டிருந்தது. அதனுடைய கண்களைத் திறந்து என்னைப் பார்க்கக்கூட இயலாமல் இருந்தது. நான் 'அது சரி, சாப்பிடுபவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை' என்று நினைத்தேன் ஒரு பழைய நல்ல பெந்தகோஸ்தே கூட்டங்கள் என் நினைவிற்கு வந்தது. அங்கு நாங்கள் எங்கள் கரங்களை தேன் ஜாடியில் ஆழத்தில் மூழ்கடிப்பது வழக்கம். உங்களுக்கு தெரியுமே, அந்த பெந்தகோஸ்தே தேன். வினோதமான காரியம் என்னவென்றால், அதனுடைய வயிறு நிறைந்த பிறகு என் வாளி முழுவதுமாக பசபசப்பாகி விட்டிருந்தது. அது தன் தாயிடமும், சகோதரனிடம் சென்றது. அந்தத் தாய் அதை நக்கினது. 17ஆகவே நான் நம்புகிறேன் - நமக்கு இங்கே நிறைய கிடைக்கிறது, நாம் வீடுகளுக்கு செல்லும் போது, இங்கே வரமுடியாதவர்கள் நம்முடைய அனுபவத்தில் சிறிதளவு நக்கிக்கொள்ளட்டும். இந்த ஹாட் ஸ்பிரிங்க்ஸில் கர்த்தர் என்னென்ன மகத்தான காரியங்களைச் செய்தாரோ அதைக்குறித்து அவர்களிடம் சொல்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, ஜெப அட்டைகளில் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களை அழைத்து அவர்களுக்காக ஜெபிப்பது உண்டு. ஆனால் இன்று ஜெப அட்டைகளை வினியோகித்தலைக் குறித்து அவர்களால் அறிவிப்பு கொடுக்கமுடியவில்லை. ஒரு இரவு இங்கு உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஆகவே நாளை இரவு அவர்கள் ஜெப அட்டைகளை வினியோகிப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரு வேளை மதியம். சரியா? ஆம், நீங்கள் ஏற்கனவே ... ஆறு மணிக்கு? நாளை மாலை ஆறு மணிக்கு. 18இப்பொழுது இங்கே வேதாகமத்திலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து வாசித்து, கர்த்தர் நமக்கு என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். வேதாகமத்தை திறப்பதற்கு முன் தலைகளை தாழ்த்தின வண்ணமாக புத்தகத்தின் ஆக்கியோனிடத்தில் பேசுவோமாக. உங்கள் தலைகள் வணங்கியிருக்கையில், ஜெபிப்பதற்கு முன்பாக நம்மிடத்தில் இருக்கிற விசாரங்கள், இந்நாளின் கேளிக்கைகள், பரிகாச எண்ணங்கள் போன்றவற்றை புறம்பே களைந்து விடுவோம். ஏனென்றால், நாம் இராஜாவை அணுகப்போகிறோம். நினைவு கூறப்பட விரும்புகிற ஏதாவது விசேஷித்த விண்ணப்பங்கள் இருக்குமாயின் உங்கள் கரங்களை உயர்த்தி, “கர்த்தாவே”..... என்று சொல்லி உங்கள் இருதயத்தில் உங்கள் விண்ணப்பத்தை உயர்த்திப் பிடியுங்கள். 19எங்கள் பரலோக பிதாவே, கர்த்தரின் சபையில் கூடி வரவும் ஒருவருக்கொருவர் ஐக்கியங்கொள்ளவும், சாட்சி கூறவும், நீர் செய்திருக்கின்ற மகத்தான காரியங்களைக் குறித்தும் நாங்கள் சென்றிருந்த இடங்களைக் குறித்தும் கூறவும் சர்வ வல்லமையுள்ள தேவனே, இது எங்களுக்கு கிடைத்திருக்கும் சிலாக்கியம் என்றெண்ணுகிறேன். இது வேதாகமத்தில் அப்போஸ்தலர் 4-ஆம் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறது, அவர்கள் திரும்பி வந்து, கர்த்தர் செய்தவைகளை பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜெபித்த போது அவர்கள் ஒருமித்து குழுமியிருந்த இடம் அசைந்தது. தேவனே இன்றிரவு நீர் இந்த கட்டிடத்தை அசைக்க நாங்கள் எதிர்பார்க்கவிலாலை, ஆனால் நீர் எங்களை அசைக்க விரும்புகிறோம். கர்த்தாவே, எங்களுக்கு புரிந்து கொள்ளுதலை அளித்தருளும். எங்கள் நிலைமைகளை, உணர்ச்சிகளை எங்கள் இருதயத்தின் புரிந்து கொள்ளுதலை அசைத்தருளும். ஆகவே இன்றிரவு இன்னும் அதிகமாக உம்மைச் சேவிக்க தீர்மானித்து இங்கிருந்து செல்வோமாக. ஆர்க்கன்ஸாவின் மலைகளிலும், காடுகளின் வழியாகவும், குதிரைகளிலும், சரக்கு வண்டிகளிலும் எங்கள் மூதாதையர் வந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் போது பொழியப் பட்ட அதே விதமான புதிய, சுத்தமான பரிசுத்த ஆவியின் பெந்தகோஸ்தேயை அனுப்புவீராக. கர்த்தாவே நீர் பூமிக்கு அனுப்பின அந்த மகத்தான விலையேறப்பெற்ற காரியத்தைக் குறித்து வெட்கப்படாமல், ஆனால் கர்த்தராகிய இயேசுவின் கொடியைப் பிடித்துக் கொண்டு எங்கள் முன்னோடிகளின் காலத்தடங்களில் நாங்கள் நடப்போமாக. 20பழைய ஏற்பாட்டினூடாக முழுவதுமாக முன்னுரைக்கப் பட்ட, இன்றைக்கு நாங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற, வேதாகமத்தில் தேவன் எங்களுக்காக வகுத்து வைத்திருக்கின்ற இந்த மகத்தான இரட்சிப்பின் திட்டத்தை இன்னுமாக ஏற்றுக் கொண்டிராத அநேகர் உள்ளனர். எங்கள் மத்தியில் ஒரு பெரிய அசைவை உண்டு பண்ணும். கர்த்தாவே, எங்கள் விசுவாசத்தை புதிதாக்கும், எங்கள் முயற்சிகளை புதிதாக்கும். கர்த்தாவே, இந்த கன்வென்ஷன் கூட்டத்திற்காகவும், இதை இன்னும் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த மக்கள் கூட்டத்திற்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகிறேன். கிறிஸ்தவர்களாயிருந்து ஊழியம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு பூமியில் இவர்கள் மீது வந்திருக்கும் சோதனை நிறைந்த இந்த மணி நேரத்தில், அதற்குப் பின் முடிவில், உலக தோற்றத்திற்கு முன்னே நீர் மீட்டுக்கொண்டவர்களுக்காய், நீர் ஆயத்தம் பண்ணியுள்ள கர்த்தரின் மகிழ்ச்சிக்குள் பிரவேசிக்க தகுதியுள்ளவர்களாக்குவீராக. உம்முடைய வார்த்தையை ஆசீர்வதியும். 21உயர்த்தப்பட்ட ஒவ்வொரு கரத்தையும் நினைவு கூறும் கர்த்தாவே . அந்த உயர்த்தப்பட்ட கரத்தின் குறிக்கோளை நீர் அறிவீர், அதன் நோக்கத்தை அறிவீர், அதன் விண்ணப்பத்தையும் நீர் அறிவீர். நீர் ஒவ்வொருவருக்கும் அளித்தருளும்படி தேவனே நான் ஜெபிக்கிறேன். கரத்தை உயர்த்தியுள்ள ஒவ்வொருமனிதன், ஸ்திரீ, சிறு பையன் அல்லது சிறு பெண்மணி - அவர்களுக்கு அதிக இரட்சிப்பு தேவையாயிருந்தால் அல்லது உம்மோடு நெருக்கமாக நடக்க அல்லது உம்மை இரட்சகராக அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமாயின், அவர்களுடைய விண்ணப்பங் களுக்கு பதிலைப் பெறாமல் அவர்கள் இந்த இடத்தை விட்டு நீங்காமலிருப்பார்களாக. தேவனே வியாதியோடும், தேவையுடனும் உள்ளவர் களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். சுகமளித்தலின் பெரிய அலை இந்த இடத்தை கடந்து செல்வதாக. வியாதியோடு இங்கு வந்திருக்கிற ஒருவரும் வந்த வண்ணமாக இந்த இடத்தை விட்டு செல்லாதிருப்பார்களாக. இறந்த ஒரு மனிதனை உயிரோடெழுப்ப உமக்கு முடியும். மேலும் இங்கு அவர் எங்களுடன் இருக்கிறார். லாசருவின் கல்லறையினருகில் நின்று மரித்தோரிலிருந்து அவனை அழைத்த அதே தேவன் என்பதை இது காண்பிக்கிறது. பிதாவே, “நீர் நேற்றும் இன்றும் என்றும்” மாறாதவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. சில தினங்களுக்கு முன்பு எங்கள் மத்தியில் உள்ள ஒருவர் அவர் இந்த வாழ்க்கையிலுள்ள மனிதனின் சிந்தனைக்கு அப்பால் இருக்கின்ற தேசத்திலிருந்து திரும்ப அழைக்கப் பட்டுள்ளார். இதற்காக நாங்கள் எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம். உம்முடைய வார்த்தையை வாசிக்கும் பொழுது எங்களை ஒருமித்து ஆசீர்வதியும். உண்மையாகவே உம்முடைய வார்த்தை சத்தியமாயிருக்கிறது. நீரும் உம்முடைய வார்த்தையும் ஒன்றாய் இருக்கிறது. அவை பிரிந்திருக்க முடியாது. ஆகவே, பிதாவே, நீர் தாமே எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக எங்களிடம் இன்றிரவு பேசத்தக்கதாக நாங்கள் காத்திருக்கிறோம், உம்முடைய ஆசீர்வாதங்கள் எங்கள் மீது வரும்படியாகவும் நாங்கள் கேட்கின்றோம். - ஆமென். இப்பொழுது நீங்கள் அனுமதி தருவீர்களானால் நான் வேதவாக்கியங்களை திருப்பலாம் என்றிருக்கிறேன். 22சற்று முன்னர் நான் படுக்கையில் உறக்கத்தினுள் சென்றிருந்தேன். என்ன நடந்தது தெரியுமா, பில்லி அங்கு வந்து “நாம் போகலாம்” என்றான். நான் “இது சபைக்கு போகும் நேரம் என்றா சொல்கிறாய்?'' என்றேன். இன்றிரவு உங்களிடம் பேசுவதற்கு ஒரு சிறு கொத்து வேத வசனங்களை எடுக்க வேண்டியிருந்தது. வியாதியஸ்தர்களுக்காய் ஜெபிக்க சில அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நினைத்தேன். இங்கு வந்தது முதல் நான் கவனித்தேன் - இரு மனிதர்கள் கட்டில்களில் படுத்திருக்கிறார்கள். ஒரு வேளை இன்றிரவு ஜெபிக்கப்பட வந்திருக்கலாம். இப்பொழுது பில்லி திரும்பி வந்து “அப்பா நான் ”குறிப்பிட்ட நேரத்திற்குள் வர முடிய வில்லை“ என்றான். அதைக்குறித்து பேசிவிட்டு நாம் - நாம் நாளை இரவு இதனை முயற்சிப்போம்” என்றான். நான், “சரி, அட்டைகளை வினியோகம் செய்ய சகோதரர்களை ஏற்பாடு செய்ய முடியுமா என்று பார்” என்றேன். 23இப்பொழுது நீங்கள் என்னுடன் இணைந்து புத்தகத்தை II இராஜாக்கள் முதலாம் அதிகாரத்திற்கு திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் நான் எரேமியா 8-ஆம் அதிகாரம் 22-ஆம் வசனத்திற்கு திருப்ப விரும்புகிறேன். வேதவாக்கியங்களின் ஒரு பகுதியை நாம் வாசிப்போம். “ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணிப் பிரிந்து போனார்கள். அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல் வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான். கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி, நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடத்தில் விசாரிக்கப் போகிறீர்கள்? இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான். - II இராஜா. 1 - 4 … பிறகு எரேமியா புஸ்தகம் 8-ஆம் அதிகாரம் 22-ஆம் வசனம். “கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னே ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்த மடையாமற் போனாள்?” 24“ஏன்” என்ற பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். இது ஒரு - இது ஒரு கேள்வி, தேவன் கேள்வி கேட்கிறார். தேவன் நித்தியமானவர், அவர் நித்தியமானவர் என நாமறிவோம். அவருக்கு துவக்கம் ஒரு போதும் இல்லை. அல்லது அவரால் முடிவு என்ற ஒன்றை கொண்டிருக்கவே முடியாது. நித்தியம் என்பது ஒரு போதும் துவங்கவுமில்லை, ஒரு போதும் முடிவதும் இல்லை . ஏனெனில் இது நித்தியமானது. தேவனால் தம்முடைய சிந்தையையோ அல்லது தம்முடைய வழியையோ மாற்றவே முடியாது. ஆகவே தான் வார்த்தைக்கு புறம்பான எந்த கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாத மனிதர்களாக நாம் இருக்கிறோம். ஏனென்றால், தேவனும் அவருடைய வார்த்தையும் ஒன்றே என்று நாம் விசுவாசிக்கிறோம். பரி. யோவான் ஒன்றாம் அதிகாரத்தில் வேதாகமம் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம் மத்தியிலே வாசம் பண்ணினார்.'' என்று கூறுவதை நாம் விசுவாசிக்கின்றோம். ஒரு காட்சியிலே ஓர் தீர்மானத்தை செய்யும்படிக்கு தேவன் அழைக்கப்படுவாரெனில் தேவன் எதையாவதொன்றைக் கூறிவிட்டு, அதை நாளைக்கோ அல்லது வேறு எந்த ஒரு சமயத்திலும் அவராலே அவர் கூறினதை திரும்ப வாபஸ் பெறவே முடியாது. அவருடைய ஒரு தீர்மானமே நித்தியமானது. இது ஒரு போதும் மாறுவதில்லை. 25முதல் பாவம் செய்யப்பட்ட போது, ஏதேன் தோட்டத்தில் மனித இனத்திற்காக தேவன் ஒரு தீர்மானத்தைச் செய்ய வேண்டியதாயிற்று. இழந்து போன பிள்ளையைத் தம்மோடு ஐக்கியத்தில் திரும்ப கொண்டு வர முடியுமா? ஆகவே அவர் ஒரு திட்டத்தை உருவாக்கினார். இரத்தத்தின் வழியாக, இது ஒரு போதும் மாறுவதில்லை . “வேத வாக்கியங்களைப் பின் தொடர்ந்தால் இரத்தத்தினால் மாத்திரமே தான் அது இருந்தது, அது ஒரு போதும் மாறவேயில்லை. வேத வாக்கியங்களை கவனித்துத் தொடர்ந்து பாருங்கள். அது மாற்றப்படவேயில்லை அல்லது மாறவேயில்லை, அது மாற்றப்படவும் முடியாது. ஏனென்றால் அது இரத்தத்தினால் தான் என்பதே தேவனுடைய தீர்மானம் ஆகும். இருந்த போதிலும் ஆதாம் அத்தி இலைகளை வைத்து உருவாக்கினது போல, நாம் இதனை மாற்ற முயற்சித்தோம். நாம் அதற்குக் கல்வியறிவைப் பூச முயற்சித்தோம். நாம் ஸ்தாபனமாக்க முயன்றோம். மனிதனுடைய சட்டத்திலுள்ள எல்லா வற்றையும் எடுத்து அதை மாற்றிப்போட முயற்சித்தோம். ஆனால் ஐக்கியம் கொள்வதற்கான ஒரே இடம் இரத்தம் மாத்திரமே, அவ்வழி இன்னுமாக அப்படியே மாறாமல் இருக்கின்றது. 26ஆதலால், ஒருக்கால் நம்மில் அநேகர் இன்றிரவு ஒன்றாக நிற்க முடியும், ஒரு ஸ்தாபனமாக நாம் நிற்க முடியாது. ஒரு ஸ்தாபனத்தை பிரதி நிதித்துவப்படுத்த நம்மால் இங்கே நிற்க முடியாது, நாம் இங்கே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழே இந்த ஐக்கியத்திற் குள்ளாகத் தான் நம்மால் நிற்க முடியும். நாமெல்லாரும் சகோதரரும் சகோதரிகளுமாக இருக்கலாம். தேவன் மனிதனுக்கு ஒரு வழியை உண்டு பண்ணுகிறார். பிறகு மனிதன் அந்த வழியில் நடக்க மறுக்கும் போது, அப்பொழுது தேவனுக்கு அவனை, “நீ ஏன் அதைச் செய்யவில்லை?” என்று கேட்பதற்கு உரிமையுண்டு. அதைத் தான் அவர் முன்பு செய்தார். அதைத்தான் இப்பொழுதும் செய்துக் கொண்டிருக்கிறார். அதையே தான் அவர் நியாயத்தீர்ப்பு நாளிலும் கேட்பார் - ஏன், என்ன என்று? அவர்கள் கேட்டார்கள் “ஏன்”? 27இப்பொழுது நம்முடைய வேதவாசிப்பானது ஆகாபின் மரணத்திற்குப் பிறகு உடனடியாகத் துவங்கினது, ஒரு மோசமான இராஜா, ஒரு எல்லைக்கோட்டு விசுவாசி, சரியானதை செய்ய அறிந்திருந்த சரியாக என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அறிந்திருந்த ஒரு மனிதன், ஆனால் சரியானது எதுவென்று அறிந்திருந்தும் வெளியே வந்து அதைச் செய்யத்தக்கதான தைரியம் அவனுக்கு இல்லாதிருந்தது. நான் சிந்திக்கின்றேன், இந்த, இந்த உலகம் இன்று ஆகாபுக்களினால் கறைபடாமலிருந்தால் - நாம் வாழும் இந்த கிறிஸ்துவ ராஜ்யம் ஆகாபுக்களால் கறைபடுத்தப் பட்டுள்ளது. தங்களுடைய ஜீவியத்தை அர்ப்பணித்து, தேவனுக்கென ஜீவிப்பது சரியென்று அறிந்த மனிதர்கள், ஆவியினால் நிறைந்தவர்கள், வேதாகமத்தின் போதனை களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிந்திருப்பவர்கள், ஆனால் அதற்காக நின்று அதைச் செய்ய வேண்டும் என்கின்ற தைரியமில்லாமல் இருப்பவர்கள். சோதோமில் இருந்தது போல திரும்பவுமாக அதே போன்ற ஒரு சூழ்நிலை இருப்பதை இது எனக்கு நினைவுப்படுத்துகின்றது. 28“சோதோமின் பாவங்கள், லோத்தினுடைய நீதியுள்ள ஆத்துமாவை நாள்தோறும் வாதித்தது'' என்று வேதாகமம் கூறுகின்றது. அந்த மனிதனுடைய ஆத்துமா எவ்வளவு நீதியுள்ளதாக அமைந்திருந்தது, அவன் அந்த தேசத்தின் பாவங்களை நோக்கிப் பார்த்தான். எது தவறு என்பதை அவன் அறிந்திருந்தான், அவர்கள் தவறு செய்து கொண்டிருந்தனர் என்பதையும் அவன் அறிந்திருந்தான். இருந்தும் கூட எது சரியென்று அறிந்திருந்தானோ அதற்காக உறுதியாக நிற்க தைரியமில்லாதவனாக இருந்தான். இன்றைக்கு முழு உலகமும் ஒரு சோதோம் கொமோராவாக ஆகி, தேசம் முழுவதிலும், உலகம் முழுவதிலும் அதிக லோத்துக்கள் சபைகளில் நின்று, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், மேலும் அவருடைய வல்லமை எப்பொழுதும் போல் இன்றும் உண்மையாக இருப்பதை நிச்சயமாய் அறிந்த அவர்கள், பிரசங்க பீடத்தில் நின்று பாவத்தை வெளிப் படையாக குற்றப்படுத்த தைரியம் இல்லாதிருக் கிறார்கள் என்பதில் வியப்பொன்றும் இல்லை, ஏனெனில் அவர்கள் சேர்ந்துள்ள ஐக்கியத்திலிருந்து சபை பிரஷ்ட்டம் செய்து புறம்பாக்கப்படுவார்கள் என்கின்ற ஏதோ ஒரு தடையானது அவர்கள் முன்னே இருக்கின்றது. இதற்கு ஒரே பரிகாரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு திரும்ப வருதலே தான். “ஏன்? ஏன்?” 29அகசியா ஆகாபின் மகனாயிருந்தான். அனலும், குளிருமற்ற இல்லத்தில் அவன் வளர்க்கப்பட்டிருந்தான். அது முழுவதுமாய் கிறிஸ்துவ முறைமையில் இருக்க வில்லை. அவனுடைய தாய் விக்கிரக ஆராதனை செய்பவள். அவனுடைய தகப்பன் ஐக்கியத்திற்கு புறம்பே திருமணம் செய்திருந்தான். விசுவாசி அல்லாத ஒரு ஸ்திரீயை திருமணம் செய்தான். அந்த அவிசுவாசமும், விசுவாசமும் ஒன்று கலக்க முயற்சிக்கும் ஒரு சூழ்நிலையில் அங்கே வளர்க்கப்படும் குழந்தைக்கு அது எப்பொழுது மே மோசமான ஒரு குடும்பமாக இருக்கும். இப்பொழுது, இந்த தகப்பன் உண்மையாகவே விசுவாசத்தில் உறுதியாய் நிற்கும் மனிதனாக இருந்திருப்பா னேயானால் அந்த பிள்ளைக்கு மேலான சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவன் - அவன் அப்படியில்லை, அவன் அப்படியிருக்கவில்லை. தேவன் இருக்கிறார் என்று அவன் அறிந்திருந்தான், யேகோவா இருக்கிறார் எனவும் அவன் அறிந்திருந்தான். மேலும் அவனுடைய தாயாரின் தெய்வங்களையும், பின்னர் அது போன்றவற்றால் அவன் முற்றிலுமாய் குழம்பிப் போய் இருந்தான். அவன் தகப்பனாரின் இறப்பிற்கு பின், இந்த சிறுவன் கலப்பு செய்யப்பட்டவனாக, இந்த வழி, அந்த வழி என்று .... இன்றைய தேசத்தின் காட்சியும் அவ்வாறே உள்ளதல்லவா? குடும்பத்தில் ஒருவர் இந்த வழி, மற்றொருவர் வேறொன்று, ஒருவர் இந்த வழி போகிறார், ஒருவர் அந்த வழி போகிறார். கிறிஸ்துவத்தின் பெயரின் கீழ் நாம் வாலிப முறை கேடுகளை, அப்படிப்பட்ட எல்லா காரியங்களையும் உற்பத்தி செய்வதில் வியப்புற ஏதுமில்லை. ஏனென்றால் ஒற்றுமையில்லை. உண்மையான வெளியே அழைக்கப்படுதலும், தேவனுக்கென்று நிற்பதும் இல்லை . 30இப்பொழுது இந்த மனிதன் தகப்பனின் அரியணைக்கு உரிமையாளன் ஆக வருவதைப் பார்க்கின்றோம். ஒரு நாள் அவன் மாடியின் மீது எங்கேயோ சுற்றும் முற்றும் நடந்து கொண்டிருக்கும் பொழுது கிராதியின் வழியாக கீழே விழுந்து விட்டான். ஒரு வேளை அதிகம் மது அருந்தினதால் கிராதியின் வழியாக விழுந்திருப்பான். ஒரு வேளை கீழே தரையின் மீது, மேஜையின் மீது அல்லது ஏதோ ஒன்றின் மீது மோதிக்கொண்டு விலா எலும்புகளை முறித்துக் கொண்டான். அல்லது அது அவனை நசுக்கிப்போட்டது. அப்படி நசுங்கின போது அந்த உபாதை தொற்றுநோயை தோன்ற செய்திருக்கும், அது அவனுக்கு காய்ச்சலை வரவழைத்தது. அவன் மிகவும் வியாதிப்பட்டான். இப்பொழுது உள்ள மருந்துகள் எல்லாம் அந்த நாட்களில் அவர்களிடம் இல்லை. அநேக மருத்துவர்கள் வந்து, அந்த மனிதனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்தார்கள். ஆனால் அவர்களால் குணமாக்கக் கூடாதிருந்தது. மருத்துவர்களால், மருத்துவ ஞானத்தால் எவைகளை சாதிக்க முடியுமோ அதை விட பெரிய சக்தியிடம் போனால் மாத்திரமே அவனால் பிழைக்க முடியும் என்று அறிந்திருந்தான். பிறகு அங்கு செல்ல அவன் நினைத்தான். ஆகவே தன் தாயாரிடம் அனுப்பினான். 31இது தாய்மார்களுக்கு என்ன ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தை சாதாணமாக தன் தாயாரையே கவனிக்கிறதாய் இருக்கும். ஆனால் அவன் சென்றான் தன்னுடைய - தன்னுடைய தாயாரின் தெய்வமாகிய அவன் தன்னுடைய தாயாரின் தெய்வமாகிய ...... பாகால்சேபூபிடத்திற்கு விசாரிக்கும் படிக்கு ஆட்களை அனுப்பினான். அங்கே எக்ரோனில் அதனுடைய சிலை, நினைவுச்சின்னம் இருந்தது, அவன், “அங்கே இருக்கின்ற மதகுருக்களை சந்தித்து இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா அல்லது பிழைக்கமாட்டேனா” என்று கலந்தாலோசியுங்கள், அவர்கள் பாகால்சேபூப் சிலையிடம் கலந்தாலோசிக்கட்டும்“ என்றான். 32ஆனால் உங்களுக்குத் தெரியுமா, அந்த மனிதனைக் குறித்து உங்களால் கற்பனைச் செய்து பார்க்க முடிகின்றதா? தேவ பயம் கொண்டிருக்கின்ற மக்களாய் இருக்க வேண்டிய அவர்கள் இப்படிப்பட்ட ஒரு மனிதன் தங்களை ஆளுகை செய்ய அனுமதித்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அனலுமின்றி குளிருமின்றி ஒரு வெது வெதுப்பான நிலையில் இருந்தனர். சபையும் அந்த விதமான ஒரு நிலைக்குள் சென்றுள்ளதால்தான் இப்படிப் பட்ட ஒரு மனிதனை தனக்கு மேலாக அதிகாரத்தில் வைத்துள்ளது அல்லது அதிகாரம் செலுத்த அனுமதித்துள்ளது. காலங்கள் அதிக மாற்றத்தை உண்டாக்கியுள்ளது என்று நான் நினைக்கவில்லை. முழு காரியமும் ஏறக்குறைய அதே விதமாகத் தான் காணப்படுகின்றது. ஆகவே இந்த மனிதன் அரசாட்சி செய்து, தேசம் முழுவதிற்கும் தான் சொல்வது தான் கட்டளை என்ற விதமாக அமைத்து, தன்னுடைய நிலைமையை குறித்து அறிந்து கொள்ள ஏதோ ஒரு அஞ்ஞான சிலையைக் கலந்தாலோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்த இவனை ஆளுகை செய்ய அனுமதித்தார்கள். ஆகவே பிறகு, உங்களுக்குத் தெரியுமா, அவைகளுக்குப் பின்னால், தேவன் மக்களிடமிருந்து எவ்வளவாகத் தம்முடைய முகத்தைத் திருப்பியிருந்தாலும் சரி, அச்சூழலில் நீ எந்த விதமான ஒரு மனப்பான்மையை நீ கொண்டிருக்கப் போகின்றாய் என்பதைக் காண்பதற் காகவே சில சமயங்களில் அவ்விதமாக அவர் செய்கின்றார். தேவனிடத்திற்கு வருகின்ற ஒவ்வொரு குமாரனும் சோதிக்கப்பட்டு சிட்சிக்கப்பட வேண்டியவனாக இருக்கின்றான். 33ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, அவர்கள் தேவனுடய ஆவியினாலே பிறக்கும் போது அவர்களுக் குள்ளாக ஒரு சிறு இடமானது இருக்கின்றது, அது நித்தியமானதாகும். அப்பொழுது ஒவ்வொன்றும் ... அந்த விதமான ஒரு நிலைக்கு நீ தள்ளப்படுவாய். உனக்குள்ளிருக்கின்ற மானிடக் காரியம் ஒவ்வொன்றும் நீ உன் சொந்த மூளையைக் கொண்டு யோசித்துப் பார்க்கும் போது, பிசாசும் தன் ஆலோசனையை அளித்து உங்களிடமிருந்து அதை புறம்பாக்குவான். அவை எல்லாமே உடைந்து போகும் போது, உங்களுக்குள்ளாக நித்திய ஜீவன் இல்லையெனில், நீங்களும் கூட விழுந்து போவீர்கள், ஏனென்றால் நீங்கள் உங்கள் சொந்த மூளையைக் கொண்டு யோசித்துப் பார்த்து தேவனிடமிருந்து உங்களால் அகன்று சென்று விட முடியும். ஆனால் தான் ஒரு கிறிஸ்தவன் என்று உரிமை கோருகின்ற ஒரு மனிதன், முதலாவதாக தேவனுடைய ஆவியினால் பிறந்தவன் என்கின்ற ஒரு நிலைக்கு அவன் மேலேறிச் சென்று, எந்த ஒரு மனிதனும் தேவனுடைய ஆவியைக் குறித்து அவனிடம் தர்க்கித்து விளக்கிக் காண்பித்து அவனிடத்திலிருந்து அதை எடுத்துப் போட முயற்சித்தாலும் அவனிடமிருந்து தேவனுடைய ஆவியை எடுத்துப் போடவே முடியாது என்கின்ற ஒரு நிலைக்கு வருகின்ற வரையிலும் பிரசங்க பீடத்தில் நிற்கவோ அல்லது சபையில் ஒரு பொறுப்பில் இருக்கவோ அல்லது எங்கேயும் ஒரு தலைவனாகவோ இருக்க உரிமை கிடையாது. 34ஜனங்களை விடுவிக்க தேவன் மோசேயை அனுப்பின பொழுது, முதலாவது அவனை வனாந்தரத்தின் பின் பகுதியில் கொண்டு சென்றார். அங்கு அவன் 40 வருடங்கள் பயின்ற வேத சாஸ்திரம் அனைத்தையும் எடுத்துப் போட்டார். பிறகு அவனுக்கு காட்சியளித்தார். அவன் நாற்பது வருடங்களாக கல்வி பயின்று கற்றுக் கொண்டு அறிந்திருந்ததைக் காட்டிலும், எரிகிற முட்செடியின் பிரசன்னத்தில் 5 நிமிடத்தில் அவன் தேவனைக் குறித்து அதிகம் தெரிந்து கொண்டான். இன்றிரவு சபைக்கு தேவைப்படுவது என்னவென்றால் மற்றுமொரு எரிகிற முட்செடி அனுபவமே ஆகும், நயமாக பேசும் ஜனங்களிடத்தில் . . . வேதம் சொல்கிறது என்னவென்றால் “கடைசி நாட்களில் அந்த இரண்டு ஆவிகளும் மிகவுமாக ஒன்று போலவே இருந்து கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். 35ஒரு மனிதன் தேவனோடு அந்த புனித நிலத்தின் மேல் நிற்க வேண்டியவனாக இருக்கிறான்; அப்போது எல்லா வேதாகம அறிஞர்களும், வேதாகமத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அனைவரும், எல்லா நாத்திகர்களும், சொந்த மூளை யோசனை தர்க்கங்களும், வேறு எந்த ஒன்றுமே அந்த மனிதனுக்கு தர்க்கித்து விளக்கினாலும் அந்த விளக்கத்தினாலே தேவனிடமிருந்து அகன்று போகவே மாட்டான். தேவன் வந்த போது அவன் அங்கே இருந்தான், அப்பொழுது சம்பவித்தது என்ன என்பது அவனுக்குத் தெரியும். அதன் பேரில் அவனுக்கு ஒரு விவர விளக்கத்தை அளித்து யோசிக்க வைத்து அவனை தேவனிடமிருந்து அப்புறப்படுத்த முடியாது ; ஏனென்றால் அது சம்பவித்த போது அவன் அங்கே இருந்தான். இதைப் போன்ற காலங்களில் அரசாங்கத்திலும், சபையிலும், எந்த இடத்திலும் அப்படிப்பட்ட ஒரு மனிதன் தான் இன்று நமக்குத் தேவை. வழிநடத்தும் தன்மைக்கு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு மனிதனே நமக்குத் தேவை. இன்றைய சபையின் தேவையும் அதுவே, வேத அறிவு படைத்தவன் அல்ல. ஆனால் ஆவியில் நிரம்பிய, பரிசுத்த ஆவியை முழுவதுமாக கொண்டிருக்கின்ற மறுபடியும் பிறந்த மனிதனே ஆவான். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் அப்படிப்பட்டவர்கள் அதிகம் பேர்களை நாம் கொண்டிருப்போமானால், சபையானது இப்பொழுது காணப்படுவதைப் போல் இருக்காமல் வித்தியாசமானதாக இருக்கும், முன்னோர்களின் பாரம்பரியங்கள் மற்றும் அதைப் போன்றவர்களின் பின்னால் செல்லாமல் தேவனின் ஆவியில் நிறைந்த அதிகமான மனிதர்கள் நம்மிடையே இருப்பின் காரியங்கள் வித்தியாசமானதாக இருக்கும். 36இப்பொழுது நாம் காண்பது என்னவென்றால் இந்த மனிதன் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விவரம் கேட்டு வரும்படி அனுப்பியிருந்தான். ஆனால் எல்லா வேளைகளிலும் அவனுடைய செய்கைகளை தேவன் அறிந்திருக்கிறார். ஆகவே அவருக்கு எலியா என்ற பெயரில் ஒரு தீர்க்கதரிசி இருந்தான். அவர் எலியாவிடம் உரைத்தார். “அந்த குறிப்பிட்ட பாதை வரை சென்று அந்த வழியில் நில், தகவல் கொடுப்பவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். நீங்கள் பாருங்கள். நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தாலும் சரி, உங்களால் எதையுமே தேவனிடத்திலிருந்து மறைத்து வைக்கவே முடியாது. இப்பொழுது எங்கோ வனாந்திரத்தில் தேவன் எலியாவுடன் பேசுகிறதை அந்த மனிதன் எவ்வளவாக அறியாதிருந்தான். எங்கோ ஒரு சிறிய மண்குகைக்குள் இருந்த, அவனிடம் “போ, பாதையின் மூலையில் நில். அந்த ஆட்களிடம் பேசு, அவர்களிடம் 'நீங்கள் நேராக அவனிடம் சென்று இதை கூறுங்கள், ”கர்த்தர் உரைக்கிறதாவது அவன் படுக்கையிலிருந்து இறங்கவே மாட்டான்“ என்று கூறு” என்று அவரால் கூற முடிந்தது. மேலும் அவர், “ஏன் நீ இப்படிச் செய்தாய்? எது உன்னை இப்படி செய்யும்படிக்குச் செய்தது? இஸ்ரவேலிலே தேவன் இல்லை என்கின்ற காரணத்தாலா? அவர் ஒரு தீர்க்கதரிசியை கொண்டிருக்கவில்லை என்பதனாலா? அதன் காரணமாகத்தான் நீ இதைச் செய்தாயா? ஏன், என்ன சம்பவித்துள்ளது என்பது உனக்குத் தெரியுமல்லவா, வேதாகமம் உனக்குத் தெரியும். அவைகளை உன் சொந்த அரண்மனையிலேயே நீ வைத்திருக்கின்றாய். அங்கே சுற்றிலும் ஆசாரியர்கள் உள்ளனர். நீ ஒரு சிறு பையனாக இருந்த முதற்கொண்டு வேதாகமத்தை வாசித்திருப்பாய் என்பதில் சந்தேகமே யில்லை. இருந்தும் கூட ஏன் இப்படிப்பட்ட ஒரு அற்பமான காரியத்தைச் செய்தாய்? என்று அவனிடம் கேள்” என்று கூறினார். 37இன்றிரவு கிறிஸ்து காட்சியில் வருவாரானால், அல்லது இன்றைக்கு இந்த தேசத்தின் மீது வந்து இந்த தேசத்தை நியாயத்தீர்ப்பிற்கு இழுக்கும் போது அதே கேள்விகள் தான் மறுபடியும் கேட்கப்படும் என்பதில் எனக்கு வியப் பொன்றுமில்லை. ஏன் இப்படி, இப்படி? நாம் ஏன் இந்த காரியங்களைச் செய்கிறோம்? பொது ஜனங்கள் மத்தியில் வேதாகமத்தை வாசிக்கலாமா கூடாதா, என்று அரசாங்கத்தில் நாம் பரபரப்படைந்து குழம்பிக் கொண்டிருக்கிறோம். நாம் இந்த அர்த்தமற்றவைகள் எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டிருக்கும் போது ஏன், நாம் அதைச் செய்யக் கூடாதா? நம்முடைய முற்பிதாக்கள் இந்த அரசியல் சாசனத்தை ஒழுங்கிலே அமைக்க வில்லையா? இந்த நாடு வேதாகம கொள்கைகளின் மீது பிறக்க வில்லையா? தேவனுக் குள்ளாக நாம் விரும்புகின்ற படியே சரியாக செயல் படவும், சத்தியம் என்று நாம் நிச்சயித்திருக்கின்ற வழியிலே நாம் நடக்கத்தக்கதாக உள்ள மத சுதந்தரத்திற்காகத்தானே நாம் இருக்கின்றோம்? 38ஆனால் நீங்கள் பாருங்கள், அன்று அவர்கள் செய்தது போலவே நாம் செய்திருக்கிறோம். நம்முடைய தேவனுக்குள் நாம் கொண்டிருக்கும் நம் விசுவாசத்தையும், சத்தியத்திற்காக நின்ற மனிதனையும் நாம் கனம் பண்ணுவதற்கு பதிலாக, அரசியல், மற்றும் எல்லாமும் நம்மை விழுங்கும்படியாக நாம் அனுமதித்துக் கொண்டிருக் கின்றோம். நாம் நியாயத்தீர்ப்பிற்காக வந்து கொண்டிருக்கையில், அந்த காரியங்களுக்கு மேலாக நம்முடைய அரசியல் மேலேறி ஓடவும் இந்த தேசத்தை பாழாக்கிக் கொண்டிருக்கின்ற அந்த காரியம் அதிகாரத்துக்கு வரவும் நம் வாக்குகளை போட்டு அனுமதித்து உள்ளோமே. ஒரு நாளிலே தேவன் தம்முடைய மகத்தான தீர்க்கதரிசியுடனே காட்சியில் வந்து இந்த சந்ததியில் உரைப்பார் - ஜனங்களிடம் சொல்லுவார், பேசுவது தேவன் தான் என்பதையும் அவர்கள் காண்பார்கள். ஆனாலும் அவர்கள் மனந்திரும்ப மாட்டார்கள். அன்று இருந்தது போலவே இன்றும் இருக்கும். அவர் “இஸ்ரவேலில் தேவன் இல்லையோ? தேவன் இல்லாதபடியால் இப்படியாகின்றதா?” என்று கூறினார். எரேமியா கூறியிருந்த அதே விதமாக. “கிலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? அங்கே வைத்தியனும் இல்லையோ?” அப்பொழுது அவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை , ஏனெனில் அது அங்கே இருந்தது. நல்லது அவர் ''அப்படியானால், ஏன், ஏன் இதைச் செய்தாய்? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? என்றார். 39இப்பொழுது இன்றிரவு நாம் அதைக்குறித்து வியப்படையலாம். ஏன்? அங்கே வேதாகமம் இல்லையா? அங்கே தேவன் இல்லையா? அங்கே ஒரு வித்தியாசம் காணப்படவில்லையா? தேவன் நியாயத்தீர்ப்புச் செய்ய ஜனங்களை - கொண்டு வருவாரெனில் அவர்களை நியாயந்தீர்க்க அவர் ஏதாவதொன்றைக் கொண்டிருக்க வேண்டும். அங்கே ஏதாவதொரு ஒழுங்கு நியதி இருந்தாக வேண்டும். அவர் அவர்களை கத்தோலிக்க சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரெனில்; அவர்கள் ரோம சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்களானால், கிரேக்கச் சபை இழக்கப்படும், ஏனைய கத்தோலிக்கச் சபைகளும் இழக்கப்பட்டு விடும். அவர் அதை கிரேக்க சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால் ரோம சபையானது இழந்து போய்விடும். அவர் லுத்தரனைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரெனில், மெத்தோடிஸ்ட் இழக்கப்பட்டு விடும். மெத்தோடிஸ்டுகளைக் கொண்டு நியாயந்தீர்ப்பா ரெனில், லுத்தரன் இழக்கப்படும். தேவனால் ஒரு சபையைக் கொண்டு நியாயந்தீர்க்க முடியாது. அதிலிருந்து மிக அதிகமான எண்ணிக்கையில் வித விதமான ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆனால் தேவன் இந்த உலகத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயத்தீர்ப்பு செய்வதாக சொல்லியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவே வார்த்தையாக இருக்கிறார். அந்த வார்த்தை தேவனாக இருக்கிறது. அவர், இந்த வேதாகமத்தைக் கொண்டு அவர்களை நியாயந்தீர்க்கப் போகிறார். ஏனெனில் அது தான் வார்த்தையாகும். அது தான் தேவனுடைய ஒழுங்கு நியதி, பிரமாணம் ஆகும். வேதாகமம் என்ன கூறுகின்றதோ அது கூறியிருக்கின்ற ஒழுங்கின்படியே நாம் நம்மை நடப்பித்துக் கொள்ள வேண்டும். ஏன் நம்மிடையே இவ்வளவு குழப்பம், மிக அதிக ஸ்தாபனங்கள், சகோதரத்துவத்தைப் பிரித்து மற்றும் - மற்றும் எல்லாவற்றிற்கும் காரணமாக மிக அதிக வித்தியாச பேதங்கள் ஏன் உள்ளன என நாம் வியப்படைகின்றோம். கிலேயாத்தில் வேறே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? தேவன் நம்மிடத்தில் அந்தக் கேள்வியைக் கேட்பாரோ என்று ஆச்சரியமுறுகிறேன்? 40இப்பொழுது குறிப்பாக அவர்களிடத்தில் வைத்தியன் இல்லாமற் போகவில்லை. அவர்களுக்கு இருந்தது, தேவனே அந்த வைத்தியர். அங்கே இஸ்ரவேலில் தேவன் இல்லாதபடியால் அல்ல. அங்கே ஒரு தேவன் இருந்தார். காரியங்கள் எப்படியுள்ளது என்று கண்டு கொள்ளவும், கலந்தாலோசிக்கவும் அவர்கள் ஒரு தீர்க்கதரிசியை உடையவர்களாயிருந்தனர். ஆனால் இது அந்த ராஜாவின் சொந்த பிடிவாதமான தீர்மானமே. சரியாக அப்படியே. இன்றைக்கு இந்த தேசத்தில் உள்ள காரியம் அதுவே. இது ஜனங்களின் சொந்த பிடிவாதமான தீர்மானம். தம்முடைய ஜனங்களுடன் செங்கடலைக் கடந்து, வனாந்திரத்தில் அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் உணவளித்து போஷித்த அதே தேவனை நாம் கொண்டிருக்கவில்லை என்பதினால் அல்ல. ஆதியில் நாம் கொண்டிருந்த அதே தேவன் நம்மிடையே நாம் கொண்டிருக்கவில்லை என்பதினால் அல்ல. இது இந்த ஜனங்களின் சொந்த பிடிவாத வழியே. தங்களை தாழ்த்த அவர்களுக்கு விருப்பமில்லை. வேதாகம வழி ஜீவியமான, பரிசுத்தம் மற்றும் கற்புள்ள வாழ்க்கை வாழ்தலுடன் எந்த ஒன்றையும் கொண்டிருக்க அவர்களுக்கு விருப்பமே இல்லை. சர்வ வல்லமையுள்ள தேவனின் வாக்குத்தத் தங்களுக்கும், கட்டளைகளுக்கும் தங்களை தாழ்த்தி கீழ்ப்படிவதைக் காட்டிலும் ஏதாவது ஒரு சபையில் இருந்து கொண்டு, ஒரு புத்தகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு, மற்றைய உலகத்தாரைப் போல ஜீவிப்பதையே தெரிந்து கொள்கிறார்கள். இன்றைய காரியமும் அதுவே. அவர்கள் செல்கிற விதமாய் காரியங்கள் போக காரணம் அதுவே, ஜனங்கள் வார்த்தையிலிருந்து விலகிவிட்டார்கள். நாம் சரியான பாதைக்குள் திரும்ப வராத மட்டும் உங்களை நேராக்கிக்கொள்ள ஒரு போதும் முடியாது. 41அவர்கள் இந்தக் கட்டிடத்தைக் கட்டினார்கள், ஆனால் மூலையையோ எங்கோ ஓரிடத்தில் வைத்து விட்டார்கள், காரியம் அப்படி இருக்கையில் உங்கள் கட்டிடத்தை கட்டி எழுப்பவே முடியாது. அஸ்திபாரத்தின் மீது தான் நீங்கள் நாட்டப்பட வேண்டியவர்களாக உள்ளீர்கள். அந்த அஸ்திபாரமானது வேதாகமம், வேதாகமத்தின் பேரிலான அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்கள். இராஜாவின் சொந்த பிடிவாதமான பாதை, அங்கே அனுப்ப அவனுக்கு சற்றும் விருப்பமில்லை. இது அதிக பிரபலமானதாக இருக்கவில்லை . தேவனுடைய உண்மையான, சரியான ஜீவிக்கும் முறை ஒரு போதும் பிரபலமானதாக இருக்கவில்லை . இது ஒரு போதும் பிரபலமானதாக இருக்கப்போவதுமில்லை, ''சுவிசேஷத்தின் உபதேசமானது கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது.“ பவுல், ”இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். ஏனெனில் அது விசுவாசிக்கிறவர்களுக்கு அது இரட்சிப்பும், தேவ பெலனுமாயிருக்கிறது என்று பவுல் கூறினான். இந்த இராஜா பிடிவாதக்காரனாக இருந்தான் என்று நாம் இங்கே பார்க்கின்றோம். 42சரியாக இன்று இருக்கின்றதைப் போலவே, ஒரு நோயாளி தன்னைக் கொல்லப் போகின்ற ஒரு விதமான காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவனாக, மருத்துவரிடம் சென்று அவனுடைய வாசலின் படிகளில் படுத்துக் கொள்ளும் போது எப்படி இருக்கும்? அந்த மருத்துவர் வாசலிற்கு வந்து “ஐயா, உள்ளே நான் மருந்து வைத்திருக்கிறேன்” என்று கூறினார். நோயாளி, “ஆஹ், என்னால் வரமுடியாது” என்றான். “இங்கே உள்ளே வாருங்கள். நான் உங்களுக்கு ஊசி போடுகிறேன் தடுப்பூசி” “எனக்கு உங்கள் மருந்து தேவையில்லை” இப்பொழுது “ஐயா, நீங்கள் உள்ளே வருவீர்களானால் என்னால் - என்னால் உங்களுக்கு உதவ முடியும்” என்று கூறினார். நல்லது, “நான் உள்ளே வரமாட்டேன்” அந்த மனிதன் மருத்துவரின் வாயிற்படியில் கிடந்து மரித்துப்போகிறான். மருத்துவரின் வாசற்படிகளிலே மரித்தான். ஏனென்றால் அவனுக்கு பீடித்திருந்த டைஃபாய்டு காய்ச்சல் அல்லது அது எதுவாயிருந்தாலும், அதற்கான தடுப்பூசியை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகவே அந்த மனிதன் சரியாக மருத்துவரின் வாசலிலே மரித்துப் போகிறான். இப்பொழுது அந்த மனிதன் ...... அந்த நோயைக் குணப்படுத்தும் மருந்து அவர் கொண்டிருப்பாரானால் அந்த மருத்துவரின் மேல் நீங்கள் பழியைச் சுமத்த முடியாது, அதைக் கொடுக்க மருத்துவரும் விருப்பமாயிருந்தார், அந்த மருந்தும் அளிக்கப் பட்டிருந்தது. அந்த மனிதன் மருத்துவரின் வாயிற்படிக்கு அவ்வளவு அருகில் வந்து அங்கே அமர்ந்து பிறகு அங்கே அவன் மரித்தான். உங்களால் மருத்துவரை குறை கூற முடியாது, உங்களால் மருந்தைக் குறை கூற முடியாது, உள்புறத்தில் அவன் வியாதியை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இருந்தும் கூட, மருத்துவரின் வாயிற்படியில் நின்று வியாதியுள்ள மரித்துப்போன இந்த மனிதனைத் தான் குற்றப்படுத்த வேண்டும். நல்லது, இது ஒரு உவமையே. 43ஆனால் உங்களுக்குத் தெரியுமா, தேவன் தம்முடைய இராஜ்ஜியத்திற்குள் ஒரு மருந்தைக் கொண்டிருக்கிறார், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு பாவ வியாதியையும் அது சுகமாக்கும். ஜனங்களோ, சபையின் வாயிற்படிகளில் தங்களை ஸ்தாபித்துக்கொள்கிறார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் ஆலயத்தில் ஒதுக்கப்பட்ட பிரத்தியேக இருக்கையில் அமர்கிறார்கள், இழக்கப்பட்டுப் போகிறார்கள். அங்கிருந்து நேராக நரகத்திற்குப் போகிறார்கள். ஏனெனில் அவர்கள் மருத்துவரின் மருந்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதே. ஆமென். அது சரி, அவர்கள் முற்றிலுமாக, மருத்துவரின் மருந்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஆகவே, அவர்கள் வியாதிகளினால் மரிக்கிறார்கள். ஜனங்கள் சபையில் உட்கார்ந்துக் கொண்டு, தேவனுடைய செய்திகளைக் கேட்கிறார்கள். அவைகளை விசுவாசிக்கிறார்கள். ஆனால் அதை ஏற்றுக்கொள்வ தில்லை. “நல்லது, இப்பொழுது, நான் அது சரி என்று விசுவாசிப்பதில்லை” என்று அவர்கள் சொல்கிறதில்லை, அவர்களில் சிலர் வந்து, பேசி இதனோடு ஒத்துப் போவார்கள். “நான் விசுவாசிக்கிறேன், இது சரி என்று சொல்லி, ஆனால் நீங்கள் அதன்படி செய்வது இல்லை. பாருங்கள், நீங்கள் மரித்துப்போவீர்கள், ஏனென்றால் பரிகாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் சபையின் இருக்கைகளிலே தரித்து மரித்துப் போகிறார்கள். அவர்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படி ஏற்றுக்கொள்வார்களானால், அது ஜனங்களிலிருந்து சிறிது புகழை எடுத்துப் போட்டு விடும். அது அவர்களை சிறிது அசைத்துப் போட்டு விடுகிறது. 44அவர்கள் புதிய பிறப்பைக் குறித்து பயப்படுகின்றனர். எந்தவொரு பிறப்பும் அசுத்தம் நிறைந்தது என்று உங்களுக்குத் தெரியும். அது ஒரு பன்றிக் கொட்டகையில் ஆனாலும், ரோஜா நிறத்தில் அலங்கரிக்கப் பட்ட மருத்துவமனையில் இருந்தாலும் அது ஒரு அசுத்தமே. புதிய பிறப்பும் அப்படியே. நீங்கள் செய்வீர்கள் என்று நினைத்துக் கூட பார்த்திராத காரியங்களைச் செய்யும்படிக்கு புதிய பிறப்பானது செய்யும். அது உங்களைத் திருத்தி நேராக்கும். நீங்கள் முற்றிலும் சரியாக ஆவதற்கு முன்னர், அந்த அசுத்தத்தினூடாகத்தான் வர வேண்டும். அது சரி ஆமென். ஒரு வித்து முளைப்பதற்கு முன்பு அது மரித்து அழுக வேண்டும். இன்றைக்கு ஜனங்களிடமுள்ள காரியமானது என்னவென்றால், அவர்கள் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறக்க ஏதுவாக, உலகத்திற்கு மரித்து அழுகிப் போக அவர்கள் விருப்பமே இல்லை என்பதே ஆகும். பாருங்கள், அது சரியே. அந்த புதியப் பிறப்பைக் குறித்து அவர்கள் பயப்படுகின்றனர். அவர்கள் பயப்படுகின்றனர். அது அவர்கள் செய்ய விரும்பாத காரியங்களை செய்ய வைக்கும். அது அவர்களிடமிருந்து புகழை வெளியே எடுத்துப் போடும். அது அவர்களிடமிருக்கின்ற சுயபெலத்தை எடுத்துப் போடும், ஓ, நான் உங்களிடம் கூறுகிறேன். இன்றிரவு அதை உங்களிடமிருந்து எடுத்துப் போடும் தடுப்பு மருந்து உள்ளதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரனே அது உலகத்தை வெளியே எடுத்து விடும். அது ஜனங்களை ஸ்தாபன பேதமின்றி சகோதரத்துவத்தில் ஒன்றிணைக்கும். அது ஒரு சாதாரண உடை அணிந்த ஒருவர், விலை மதிப்பு மிகுந்த டக்செடோ சூட், (tuxedo suit) அணிந்துள்ள ஒருவரை கட்டித் தழுவி, “சகோதரனே, நான் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!'' என்று கூச்சலிடும்படிக்குச் செய்யும். ஆமென். நிச்சயமாக! ஆனால் நீங்கள் .... அவர்கள் தடுப்பு மருந்தைக் குறித்து பயப்படுகின்றனர். ஓ, என்னே ! நீங்கள் ஒரு வேளை, நீங்கள் ஒரு வேளை மருத்துவரிடம் சென்றிருந்தால் மருத்துவர் தரும் மருந்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ஆபத்தாகும். நீங்கள் பயங்கொண்டால்..... நீங்கள் மருந்தை நிராகரித்தால் அது ஆபத்தானது. நீங்கள் ஒரு வேளை மரித்துப்போகலாம். மருத்துவரின் மருந்தை உட்கொள்ளாதபோது சரீரபிரகார மாக மரிக்கிறீர்கள். ஆனால் பாவத்திலிருந்து விடுவிக்கும் தேவனுடைய தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது எவ்வளவு ஆபத்தானது. 45இங்கே சில காலம் முன்பு நான் சிறிது நோய்வாய் பட்டபோது, யாரோ ஒருவர் என்னிடம் “நல்லது பில்லி, உங்களது வியாதியின் சமயத்திலும் உங்கள் மதத்தை கைக்கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டார். மேலும் அவர், “நீங்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டுள்ள ஒருவராவீர் ; அந்நிலையிலும் உங்கள் மதத்தை நீங்கள் கொண்டிருந்தீர்களா?” என்றார். அதற்கு நான், “இல்லை , அது தான் என்னைக் கொண்டிருந்தது. நான் அதை வைத்துக் கொண்டிருக்கின்றேன் என்கிற ஒன்று இல்லவேயில்லை ; மாறாக அது தான் என்னை வைத்துக் கொண்டிருந்தது”, என்று கூறினேன். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் கல்வாரியில் சிந்தப்பட்ட போது, தேவன் ஒன்றை ஆயத்தம் பண்ணினார். மனிதன் முதலில் பாவம் செய்த போது, அவன் அப்பாலே கடந்து சென்று, ஒரு பெரிய பிளவை உண்டாக்கி, தான் மறுபடியும் திரும்பி வரும்படி வழியே இல்லாதபடிக்குச் செய்து விட்டான். இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனோ, ஒரு பதிற்பொருளை (substitute) ஏற்றுக்கொண்டார், ஆட்டுக்குட்டி அல்லது ஒரு காளையின் இரத்தம் தான் அந்த பதிற்பொருளாக இருந்தது. அந்த பதிற்பொருள் அநேக வருடங்களாக இருந்து வந்தது. 46மோசே தேவனால் ஊக்குவிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தான். பாவம் முற்றிலுமாக நீக்கப்படாமல் இருந்த போது, அது காளை வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தத்தால் வெறுமனே மூடப்பட்டு இருந்தது. தேவனுடைய மகிமையை அவன் மீது பெற்றவனாய், அவனால் பேசி ஈக்களை சிருஷ்டிக்க முடிந்தது, அவனால் பேசி தவளைகள் தோன்றப்பண்ண முடிந்தது. ஏனெனில் ஒரு வார்த்தை என்பது சிந்தை வெளிப்படுத்தப்படுதல் ஆகும், ஆகவே தேவன் தம்முடைய சிந்தைகளை மோசேயிடம் கொண்டு வந்தார். அவைகளை மோசே வார்த்தைகளாக பேசினான். அந்த வார்த்தை பேசினபோது, முழு உலகமும் தேவனுடைய வார்த்தையினால் கட்டமைக்கப்பட்டது. நான் பள்ளிக்கூடத்திற்கு வழக்கமாக செல்லும் நாட்களில் என்னுடைய சட்டையில் கருப்பு நிற மை பட்டு விடுவதுண்டு. தாயார் என்னுடைய சட்டையை கழற்ற இவ்விதம் கூறுவார்கள். “தேனே உடனடியாக என்னிடம் தா”. பின் அதன் மீது நிலக்கரி எண்ணெயை ஊற்றுவார்கள். அந்த மையின் மீது நிலக்கரி எண்ணெய் ஊற்றப்ட்ட பகுதி பெரிய வட்டமான புள்ளியாகி, அங்கு முழுவதுமாக சிதறி கிடக்கும். அவர்களுக்கு தெரிந்த தெல்லாம் அதுவே. அவளிடமிருந்த மிகச்சிறந்த காரியம் அதுவே. 47ஆனால் இன்று அப்படில்ல, அவர்கள் பிளீச் என்ற ஒன்றைத் தயாரித்துள்ளார்கள். மேலும் நீங்கள் .... அந்த குளோரக்ஸ் அல்லது பிளீச், அது என்னவாயிருப்பினும் அது ஒரு வேதிப்பொருள். அந்த மை அங்கே விழும் பொழுது . . . அது அங்கே விழும் பொழுது உங்களால் ஒரு பதிற்பொருளை (substitute) ஏற்றுக்கொண்டார், ஆட்டுக்குட்டி அல்லது ஒரு காளையின் இரத்தம் தான் அந்த பதிற்பொருளாக இருந்தது. அந்த பதிற்பொருள் அநேக வருடங்களாக இருந்து வந்தது. மோசே தேவனால் ஊக்குவிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தான். பாவம் முற்றிலுமாக நீக்கப்படாமல் இருந்த போது, அது காளை வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தத்தால் வெறுமனே மூடப்பட்டு இருந்தது. தேவனுடைய மகிமையை அவன் மீது பெற்றவனாய், அவனால் பேசி ஈக்களை சிருஷ்டிக்க முடிந்தது, அவனால் பேசி தவளைகள் தோன்றப்பண்ண முடிந்தது. ஏனெனில் ஒரு வார்த்தை என்பது சிந்தை வெளிப்படுத்தப்படுதல் ஆகும், ஆகவே தேவன் தம்முடைய சிந்தைகளை மோசேயிடம் கொண்டு வந்தார். அவைகளை மோசே வார்த்தைகளாக பேசினான். அந்த வார்த்தை பேசினபோது, முழு உலகமும் தேவனுடைய வார்த்தையினால் கட்டமைக்கப்பட்டது. நான் பள்ளிக்கூடத்திற்கு வழக்கமாக செல்லும் நாட்களில் என்னுடைய சட்டையில் கருப்பு நிற மை பட்டு விடுவதுண்டு. தாயார் என்னுடைய சட்டையை கழற்ற இவ்விதம் கூறுவார்கள். “தேனே உடனடியாக என்னிடம் தா”. பின் அதன் மீது நிலக்கரி எண்ணெயை ஊற்றுவார்கள். அந்த மையின் மீது நிலக்கரி எண்ணெய் ஊற்றப்ட்ட பகுதி பெரிய வட்டமான புள்ளியாகி, அங்கு முழுவதுமாக சிதறி கிடக்கும். அவர்களுக்கு தெரிந்த தெல்லாம் அதுவே. அவளிடமிருந்த மிகச்சிறந்த காரியம் அதுவே. 48ஆனால் இன்று அப்படில்ல, அவர்கள் பிளீச் என்ற ஒன்றைத் தயாரித்துள்ளார்கள். மேலும் நீங்கள் .... அந்த குளோரக்ஸ் அல்லது பிளீச், அது என்னவாயிருப்பினும் அது ஒரு வேதிப்பொருள். அந்த மை அங்கே விழும் பொழுது . . . அது அங்கே விழும் பொழுது உங்களால் வருகிறீர்கள். மேலும் அங்கிருந்து தூர செல்லும் போது நீங்கள் எலக்ட்ரான்களை அடைகிறீர்கள். அங்கிருந்து நீங்கள் எங்கே செல்ல முடியும்? நீங்கள் திரும்பி செல்லத்தான் வேண்டும். ஏனெனில் அது சிருஷ்டிப்பாகும். அது சிருஷ்டிகரிடமிருந்து வர வேண்டும். நீங்கள் அதை செய்தாக வேண்டும். ஆகவே அது எல்லா வழிகள் மூலமாக அதனுடைய சிருஷ்டிகரை அடைந்து விட்டது. அந்த மையிலிருந்த அந்த நிறம், அது ஒரு போதும் திரும்பி வர முடியாது. 49இப்பொழுது காளைகளின், வெள்ளாட்டுக் கடாக்களின் இரத்தம் பாவத்தை போக்க முடியாது என்பதை தேவன் காண்கிறார். அவர் ஒரு போதும் தயாரிக்கவில்லை. ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்குள் ஒரு வேதிப்பொருளை சிருஷ்டித்தார். (ஆமென்). அந்த பாவம் ஒரு முறை சரியான வழியில் அறிக்கை செய்யப்படும் பொழுது ....? நீங்கள் ..... நீங்கள் அந்த பலியை கடந்து போவதும் கூட இல்லை. மாறாக நீங்கள் அந்த பிளவை முழுவதுமாக அகற்றிப் போடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் பாவம் செய்துள்ளீர் களா என்று கூட தேவனுக்குத் தெரியாது. அது சரி, அவர் அவைகளை மறதி என்னும் கடலில் போட்டுவிட்டதாக அவர் சொன்னார். உங்களுக்கு எதிராக அவை இனி ஒரு போதும் நினைக்கப்படுவதில்லை. அதன் பிறகு புருஷர்களும், ஸ்திரீகளும் தேவனுடைய சமூகத்தில் தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாக தங்களுடைய தேவனின் சுபாவத்தை தங்கள் இருதயங் களில் கொண்டவர்களாக நிற்கின்றார்கள். நண்பனே, இன்றைக்கு சபை எங்கே இருக்கின்றது? சபைக்கு என்ன நேர்ந்தது? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவங்களை மன்னித்து, நாம் பாவம் செய்தோம் என்பதானது தேவனுக்கு நினைவிலேயே இல்லை என்கின்ற நிலைக்கு இரத்தமானது செய்திருப்பதை நம்மால் காண முடியும் போது, அப்பொழுது, “நீங்கள் என் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்”? என்ன காரியம்? இந்த வேத வசனங்களை சிலர் ஜனங்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர் (Indocumating). இந்த ஒரு காரியத்தை மாத்திரமே என்னால் சுட்டி காண்பிக்க முடியும். ஏனெனில் தேவனுடைய பரிகாரம் இப்பொழுதும் அதே விதமாகத்தான் இருக்கின்றது. இப்பொழுது மருத்துவரின் தடுப்பு மருந்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதே ஆபத்தாயிருக்குமானால் தேவனு டையதை ஏற்றுக்கொள்ள மறுப்பது எவ்வளவு ஆபத்தை விளைவிக்கும்? 50இப்பொழுது மனிதன் எவ்விதம் மானிட சரீரத்தில் கிரியை செய்யும் மருந்தை கண்டு பிடிக்கின்றான்? வேதியியல் அறிஞர்கள் அல்லது விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஒரு வியாதியை எடுத்து, அதனுள் என்ன கிருமி உள்ளது என கண்டு பிடிக்கிறார்கள், பிறகு ஒரு விதமான விஷத்தை, முறிவு மருந்தை எடுத்துக் கொள்வார்கள், உங்களைக் கொல்வதற்குப் போதுமான விஷத்தை எடுத்துக் கொள்வார்கள், மற்றும் அந்த விஷத்தை முறிக்கும் முறிவு மருந்தையும் எடுத்துக் கொள்வார்கள், அதை முதலாவது கினி பன்றிக்குள் செலுத்துவார்கள். உங்களுக்குள்ள வியாதியை சீமை பெருச்சாளிக்கு (guinea pig) கொடுப்பார்கள். பிறகு மருந்தை சீமை பெருச்சாளிக்குள் (guinea pig) செலுத்துவார்கள். அது பிழைக்குமானால் பிறகு அவர்கள் அதை உங்களுக்குக் கொடுப்பார்கள். ஆகவே, அந்த காரியம் அப்படியாயிருக்கிறது. நீங்கள் அதை அறிவீர்கள். சீமை பெருச்சாளிக்கு (guinea pig) கொடுத்து பாருங்கள். அதை பெற்றுக்கொண்டு அந்த சீமை பெருச்சாளி (guinea pig) மரிக்கவில்லையென்றால், பிறகு அவர்கள் அதனை உங்களுக்குத் தருவார்கள். இப்பொழுது எல்லா ஜனங்களும் சீமை பெருச்சாளிகளாக உருவாக்கப்படவில்லை என்று நீங்கள் அறிவீர்கள். அதுவே சிலரை கொல்லும். மேலும் சிலருக்கு உதவி புரியும். 51ஆனால் இயேசு கிறிஸ்து அளிக்கும் தடுப்பு மருந்தைக் குறித்து ஒரு காரியம். இது ஒவ்வொருவருக்கும் உதவி புரியும். இது ஒரு ஈடு செய்தல் காரியம் அல்ல. இது ஒரு குணமளித்தல் ஆகும். இன்றைக்கு ஜனங்கள், “அதிகமாக ஆட்களைக் கொல்வது இருதய வியாதியே” என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். நான் - நான் அவர்களிலிருந்து வேறுபட்டிருக்கிறேன். வித்தியாசமாக இருப்பதற்காக அல்ல. அது தவறு என நான் அறிந்திருப்பதனால் நான் சற்று வேறுபட்டு இருக்கிறேன். அதிகமாக ஆட்களைக் கொல்வது எதுவென்றால் பாவம் என்கின்ற வியாதி தான். அது சரி. இருதய வியாதி அல்லவே அல்ல. அது பாவ வியாதியாகும். உங்களுக்குத் தெரியுமா? இன்று சில ஜனங்கள் வந்து ''சரி, இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் சற்று அளவிற்கு மீறி போய்விட்டீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இப்பொழுது உங்களிடத்தில் ஒன்றை நான் கேட்பேனாக. ஒரு மனிதன் பாவம் செய்து தான் ஆக வேண்டும் ; நானும் ஒவ்வொரு நாளும் சிறிது பாவத்தை செய்து தானாக வேண்டும்“ என்று கூறுகின்றனர். அது ஏனென்றால் நீங்கள் ஒரு போதும் அந்த தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. அதுவே காரியம். பாருங்கள்? ஊஹ், ஊஹ். சரி நீங்கள் ஒரு போதும் தேவனுடைய பரிகாரத்தைப் பெற முயற்சிக்க வில்லை. அதுவே சரி, நீங்கள் ஒரு வேளை அதை செய்வீர்களானால் பிறகு நீங்கள் பாவம் செய்யமாட்டீர்கள். 52“நான் வெறுமனே புகைத்தே ஆக வேண்டியுள்ளது. ஏதோ ஒன்று என்னை புகை பிடிக்க வைக்கிறது” என்கிறீர்கள். ஒரு முறை அந்த தடுப்பு மருந்தை முயற்சி செய்யுங்கள். பின்பு அது வேலை செய்கிறதா? இல்லையா? என்று கண்டுபிடியுங்கள். நீங்கள் சொல்லலாம். “என்னால் - என்னால் இதைச் செய்யாமல் இருக்க முடியவில்லை. நான் - நான் . . .'” என்று. நல்லது நீ வெறுமனே, நீ வெறுமனே தேவனுடைய விஷ முறிவை ஒரு முறை ஏற்றுக்கொள். பின்னர் அது எவ்விதம் உனக்கு செய்கிறது என்று பார். சமீபத்தில் ஒரு ஸ்திரீ என்னிடம் கூறினாள். நான் அவளிடம் சிறிய ஒழுக்கக் கேடான ஆடைகள் அணிவதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அவள் “இப்பொழுது சகோதரன் பிரன்ஹாம் உங்களிடம் நான் இதைக் கூறட்டும். அதைக் குறித்துச் சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எங்களுக்கு விருப்பமானால் குட்டைக்கால் சட்டை , ஷார்ட்ஸ் (shorts) அணிய எங்களுக்கு உரிமை உண்டு!” என்றாள் . நான் “நானும் அது சரியென்றே ஊகிக்கிறேன். ஆனால் நீ ஒரு கிறிஸ்தவளாக இருப்பாயானால், அதை அணிய நீ விரும்பமாட்டாய்” என்றேன். அவள் கூறினாள், அவள் கூறினாள்...... அவள், “நல்லது இப்பொழுது பொறுங்கள் சகோதரர் பிரன்ஹாம்” என்றார். அவள் “உங்களுக்குத் தெரியுமா, வெறுமனே அந்த கவர்ச்சி கரமான, இன்னும் அதைப் போன்ற ஆடைகள் போன்றவற்றை தவிர அவர்கள் வேறுவிதமான உடைகளை தயாரிப்பதில்லை” என்றாள். நான், “அவர்கள் இன்னமும் தையல் மிஷன்களை தயாரிக்கிறார்கள். மேலும் தையலுக்கு தேவையான பொருட்களையும் கொண்டுள்ளார்கள். சாக்குப் போக்கு சொல்வதற்கு அது சரி” என்றேன். அது ஏனென்றால் பழமை நாகரீகம் கொண்ட, தேவ இரட்சிப்பு, பரிசுத்தம் நிறைந்த கூடாரக்கூட்டம், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதான தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள அவர்களுக்கு விருப்பமே இல்லை. ஆமென். அது சரி. 53முன்பு இக்காரியங்களை செய்வது தவறாயிருந்தது. இப்பொழுதும் அது தவறாகவே உள்ளது. அது சரி, ஆனால் காரியம் என்ன? ஒரு காலத்தில் ஜனங்கள் அவ்விதமாக அவலட்சணமாக நடந்து கொள்வார்களானால், அவர் களுடைய நடக்கையின் காரணமாக சமுதாயத் திலிருந்தே அவர்கள் விலக்கி வைக்கப் படுவார்கள்; இப்பொழுதோ அவர்கள் அவ்விதமாக நடந்து கொண்டால் தான் சமுதாயத்திற்குள்ளாகவே அவர்களைக் கொண்டு வர முடியும். ஆகவே (நீங்கள் பாருங்கள்) உங்கள் பொக்கிஷம் எங்கேயோ, அங்கே உங்கள் இருதயம் இருக்கும். உங்கள் இருதயம் அதைச் சார்ந்து இருக்கும். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் உங்கள் முழு இருதயத்தோடும் தேவனிடத்தில் அன்பு கூருவீர்களானால், நீங்கள் சுத்தமான மற்றும் தூய்மையான வாழ்க்கை வாழ்வீர்கள். 54இங்கே சில சமயம் முன்பு, மனைவியும் நானும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருந்த போது, நாங்கள் ஒரு புதுமையான காரியத்தைக் கண்டோம். ஒரு ஸ்திரீ உடை அணிந்திருந்தாள். நம்முடைய நாட்டில் இது ஒரு புதுமையான காரியம். மேடா என்னிடம் “பில், அவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அந்த பெண்களில் சிலர் சபைகளில் பாடல் குழுவில் பாடுகின்றனர்” என்றாள். அவள், “ஓ எனக்கு அவர்களை தெரியும்” மேலும் அவள் “இப்பொழுது ஏன், அவர்களை இப்படி நடக்க பண்ணுகிறது என்ன?” என்று கேட்டாள். நான், “தேனே, இதோ பார், நான் மிஷனரியாக, ஊழியம் செய்யும் ஒருவனாக இதைக் கூறுகிறேன், நாம் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்றேன். “எது?” என்று கேட்டாள். நான், “நாம் வேறே ஒரு நாட்டை, வேறொரு தேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம்” என்றேன். “நாம் அமெரிக்கர்கள்தானே?” என்று அவள் கேட்டாள். நான் “நாம் இங்கே ஜீவிக்கின்றோம். ஆனால் இது நம்முடைய வீடல்ல, நாம் பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி யாத்திரை செய்கிறவர்களாய் இருக்கிறோம். தேவனால் உருவாக்கப்பட்டதும், கட்டப்பட்டதுமான ஒரு நகரத்தை நாம் தேடுகிறோம். நான் பின்லாந்துக்கு சென்றுள்ளேன். அவர்கள் பின்லாந்தில் எவ்விதம் நடந்து கொண்டனர் என்று நான் கண்டிருக்கிறேன். நான் ஜெர்மனியில் சென்ற போது ஜெர்மனிய ஆவியை கொண்டவர்களாய் அவர்கள் வழியைக் கண்டிருக்கிறேன். நான் ஸ்விட்சர்லாந்துக்கு சென்ற போது அவர்களிடம் சுவிட்சர்லாந்து ஆவி இருந்தது. நான் அமெரிக்காவுக்கு வந்த போது, அவர்கள் அமெரிக்க ஆவியை பெற்றுள்ளனர்” என்றேன். அவள் “ நல்லது பிறகு, நம்மைக் குறித்தென்ன?” என்று கேட்டாள். நான் சொன்னேன், “நாம் மேலேயிருந்து பிறந்தவர்கள், பரலோகவாசிகள், அங்கே தூய்மை, பரிசுத்தம், நீதி மற்றும் நேர்மை இருக்கும்”. ஆம். நான் “ ”ஆகவே அதனை அறிக்கையிடுகின்றவர்கள், உலகத்தின் காரியங்களை நோக்கி பார்ப்பதில்லை, ஆனால் நாம் ஒரு தேவனை உடையவர்கள் என்பதனை ஜீவியத்தின் வாயிலாக மற்றும் நம்முடைய வாழ்க்கைப் பாதையில் நாம் கூறுகிறோம், நமக்கு ஒரு இராஜ்யம் உண்டு, நமக்கென்று ஒரு ஸ்தலம் உள்ளது. நாம் அங்கே சென்று கொண்டிருக்கிறோம். மாறாக இது நம்முடைய வீடல்ல“ என்றேன். ஆமென். என்னே, நான் அதை விரும்புகிறேன். சரியாக இப்பொழுதே இனிமையான ஆவிக்குரிய உணர்வை பெறத் துவங்குகிறேன். ஆம் ஐயா, நான் இந்த பழமையான பரிசுத்த ஆவியின் இரட்சிப்பை விசுவாசிக்கிறேன். ஓ, சகோதரனே, சகோதரியே, இது உங்களுக்கு ஏதோ வொன்றை செய்கிறது, ஒரு சமயம் ஜீவித்த அதே தேவன் இன்றும் ஜீவித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய அதேவிதமான, என்றும் ஜீவித்த பிரகாரமாக அவருடைய அதேவிதமான பரிசுத்தத்தின் போதகமானது இன்றிரவும் ஜீவித்துக்கொண்டிருக்கிறது. ஆம், ஐயா, கவனியுங்கள். ஜனங்கள் அந்த போதகத்திலிருந்து விலகி விட்டனர். அப்படியே ஆம், இப்பொழுது ஆம், ஐயா. 55இன்றைக்கு மக்களை அதிகமாக கொல்வது, மக்களைக் கொல்வதில் முக்கிய பங்கு வகிப்பது இருதய வியாதி அல்ல. அதிகமாகக் கொல்வது எது வென்றால் பாவம் என்னும் வியாதியே. பாவம் என்பது அவிசுவாசம். எதன் மீது அவிசுவாசம்? வேதாகமத்தின் மீது. அது சரி. ஆம், அதுவே ஒன்றாம் நம்பர் பாவ வியாதி, அதுவே ஜனங்களை இன்றைக்கு இரண்டு விதத்திலும் ... . ஆவிக்குரிய விதத்திலும் மற்றும் சரீரப்பிரகாரமாகவும் கொன்று போடுகின்றது, ஏனென்றால் காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கும் ஒரு ஆண் மற்றும் மட்டுமீறிய அமளி உண்டாக்குகின்ற, கடுங்கோபம் கொண்டு குமுறுகின்ற, சண்டையிட்டு வாதம் பண்ணுகிற பெண், மரித்துப் போகின்றனர் என்று ஏற்கெனவே அவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது புற்றுநோய், கிருமி நோய்கள், சீழ்ப்புண் மற்றும் எல்லா நோய்களையும் அது ஏற்படுத்துகின்றது. பாருங்கள், நீங்கள் மகிழ்ச்சி கொண்டவர்களாகவும், சுதந்திரமாகவும் இருக்கும்படியாகத்தான் உண்டாக்கப் பட்டுள்ளீர்கள். உங்கள் பரமபிதா முன்பு பிள்ளைகள் போல இருக்கத்தக்கதாகவும், ஒவ்வொரு நாளையும் அவரே உண்டாக்கி, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சரியான நாளாக அமைந்து எல்லா காரியமும் நலமாக உங்களுக்கு அமைக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து அவர் முன் இருக்கவே உண்டாக்கப்பட்டுள்ளீர்கள். ஆம், ஐயா. 56ஜனங்கள் இந்த புதிய பிறப்பைக் குறித்து மிகவும் பயப்படுகின்றனர். அது தான். இது அவர்களை சரிப்படுத்தி நேர்ப்படுத்தும் என்பதனால் இதற்கு அருகில் கூட வர அவர்கள் பயப்படுகின்றனர். அது உங்களை பிங்கோ விளையாடுவதை நிறுத்தச் செய்யும். இந்த ஸ்லாட் மிஷின்களில் விளையாடுவதை நிறுத்தச் செய்யும். (ஸ்லாட் மிஷினில் நாணயத்தைப் போட்டால், சிகரெட் உணவுப்பொருட்கள் போன்றவை வெளியேரும் - ஆசி) புதன்கிழமை இரவு ஜெபக் கூட்டத்திற்கு வராமல், நாங்கள் சுசியை நேசிக்கின்றோம். தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காணவும், ஹாலிவுட் கொண்டிருக்கின்ற பைத்தியக்கார காட்சிகளையும், அக்காட்சியில் கூறப்படு கின்ற அசுத்த நகைச்சுவைகளைக் காணவும் வீட்டிலேயே தங்கிவிடுவதை நிறுத்திப்போடும். அது உங்களுடைய தலை மயிரை வெளியே நீளமாக வளரச் செய்யும். அது உங்களை ஒரு ஸ்திரீயைப் போல நடந்துக் கொள்ளவும் செய்யும். ஒரு மனிதன் புகை பிடித்து அதே நிலையில் சபையில் டீக்கன்களாக இருக்கும் காரியத்தை அது நிறுத்தச் செய்யும். அது ஜனங்கள் பொய் பேசுவது, திருடுவது போன்றவற்றை நிறுத்தச் செய்யும். அது உங்களுக்கு ஏதோவொன்றைச் செய்யும். அது உங்களைச் சுத்திகரித்து இரட்சிப்பை உங்களுக்கு அளிக்கும். உலகத்தில் உள்ள எந்த ஒரு காரியமும் உங்களிடம் வந்து உங்களோடு பேசி, விளக்கி அந்த இரட்சிப்பை உங்களை விட்டு அதை எடுத்துப்போடவே முடியாது. ஏனென்றால் அங்கே அது சம்பவித்த போது நீங்கள் அங்கிருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆம் ஐயா. 57இப்பொழுது சற்று முன்பு நான் சொன்னது போல, தேவன் ... மனிதன் மருந்தைக் கண்டுபிடிக்கும் பொழுது அவர்கள் செய்யும் காரியம், அவர்கள் முறிவு மருந்தை ஆராய்ச்சி செய்கிறார்கள். பின்பு அவர்கள் இந்த வியாதியை கண்டுபிடித்து அதனை சீமைப் பெருச்சாளிக்குள் ஊசி வழியாக செலுத்தி விடுகிறார்கள். பின்னர் அந்த பிராணி ஜீவிக்கிறதா என்று பார்க்கிறார்கள். இப்பொழுது, தேவன் இந்த தடுப்பு மருந்தைக் கொண்டு வரும் பொழுது, இன்றிரவு நான் பேசிக் கொண்டிருக்கின்ற கீலேயாத்தின் பிசின் தைலம், அவர் ஒரு சீமை பெருச்சாளியை கண்டு பிடிக்கவில்லை. அவரே வந்தார். ஆமென். அவரால் செய்ய முடிந்த ஒரே வழி தம்முடைய குமாரனின் உருவில் வருவதே. பாவத்தின் கொடுக்கை எடுப்பதற்காக மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணினார். அவர் மரிப்பதற்காக வந்தார். அவரால் ஆவியாக மரிக்க முடியாது. அவரால் மரணமடையக்கூடிய ஒரே வழி மனிதனாவது. ஆகவே இயேசு கிறிஸ்து என்றழைக்கப் பட்ட ஒரு சரீரத்தை உண்டுபண்ணினார். தேவகுமாரன். இந்த சரீரத்தில் தேவன் வாசம் பண்ணினார். மனிதர்களின் பாவங்களை எடுத்துப்போட அவரை பூமியில் இம்மானுவேல் ஆக்கினார். அந்த இரத்தத்தில் அடங்கியுள்ள இரசாயனம் அதுவே. “அவர் ஒரு யூதன்” என்று யாரோ ஒருவர் கூறினார். அவர் ஒரு யூதனல்ல. அவர்களில் சிலர், “அவர் ஒரு புறஜாதி'' என்று கூறினர். அவர் ஒரு புறஜாதியானும் அல்ல. 58அவர் தேவனுக்கு குறைவான ஒன்றுமல்ல. வேதம் சொல்கிறது, நாம் தேவனுடைய இரத்தத்தால் மீட்கப்பட்டோம் (Saved by). இரத்தம் ஆணிடமிருந்து வருகிறது. ஸ்திரீயினிடமிருந்து முட்டை மாத்திரமே. அது சரி. நான் உங்களிடம் கூறினது போன்று, வசந்த காலத்தில் இந்த தாய்ப்பறவை இங்குவெளியே கூடுகளைக் கட்டி முட்டையிடுவதுண்டு. அவைகளில் சில கூடு நிறைய முட்டைகள் இடும், அவைகள் ஒரு போதும் பொறிக்கிற தில்லை ஏன்? அவன் - அவள் கூடு நிறைய முட்டைகள் இட்டாலும், அதன் மீது மிகவும் நேர்மையாக அமர்ந்தாலும், அவள் உணவைத் தவிர்த்து கூட்டிலிருந்து பறக்கக் கூட முடியாத நிலையில் இளைத்துப் போயிருந் தாலும், ஒவ்வொரு நாளும் அவள் முட்டைகளை மாத்திரமே கொண்டிருப்பாள். அவைகளை எவ்வளாக கொஞ்சினாலும், குழந்தைகளைப் போல் பாவித்தாலும் எவ்வளவு உத்தமமாக இருந்தாலும் அவை ஒரு போதும் குஞ்சு பொறிக்காது. ஏன்? அப்பறவை தன் இணைப் பறவையுடன் இருக்கவில்லை ; ஆதலால் அந்த முட்டைகள் கருவடைய வில்லை. ஆகவே அவைகள் அங்கே, வெறுமனே கிடந்து அழுகிப்போகும். அதுவே நம்முடைய அனேக கலந்துரையாடல்களில் சம்பவிக்கின்ற காரியமாயிருக்கிறது. இன்று அவர்களில் அநேகரிடம், நம்முடைய கலந்துரையாடல்களில் நம்முடைய காம்ப் கூட்டங்களில் சம்பவிக்கின்ற காரியம் அது வே. நாம் எதைப் பெறுகிறோம்? ஒரு கூட்டம் செல்லமாகவும் பெண்தன்மையுடன் மிருதுவாகவும் பிரசங்கிக்கின்ற பிரசங்கிகளையே . . . என்ன, அது அவமானமாகும். அவன் ஏன் அப்படி வருகிறானென்றால், அவன் சிறிது செல்வாக்குடனே, அல்லது சிறிது கல்வியறிவுடன் வருகின்றான். அது அவனை காரியத்திற்கு மேலாக வைத்து விடுகின்றது. நான் கூறுவது என்னவென்றால், இன்றைய நம்முடைய தேவை என்னவென்றால் ஒரு ..... ஆனால் நம்மிடையே இருப்பது ஒரு கூடு நிறைய அழுகின முட்டைகள் மட்டுமே. 59நம்முடைய தேவை என்னவெனில் நல்ல பழைய கூடு - சுத்திகரிப்பின் நேரம் (nest cleaning time) ஆகும், அந்த சுத்திகரிப்பினால், எல்லாம் வெளியே தள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஆண்களும் பெண்களும் நாம் பெறும் வரைக்கும் ; இயேசு கிறிஸ்துவாகிய இணையுடன் இருந்து அவர் பெற்றிருந்த அதே ஆவியினால் நிரப்பப்பட்ட அவர்கள் வரும் வரைக்குமே. அது சரியே. அப்பொழுது நாம் கூட்டத்தில் ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். ஆம் ஐயா, விஷ முறிவு மருந்து, அதைக்குறித்து அவர்கள் பயப்படுகின்றனர். இயேசு கிறிஸ்து, தேவ குமாரன் அவர் பிறந்த போது, அவர்களில் சிலர் சொன்னார்கள், “நல்லது, இப்பொழுது அவர் - அவர் மரியாளின் முட்டையிலிருந்து வந்தார்”. அவர் அப்படியல்ல. மரியாளின் கருப்பையில் முட்டை அந்த குழாயின் வழியாக வர வேண்டுமானால் அங்கே ஒரு உணர்ச்சி தூண்டப்பட வேண்டும். ஆகவே தேவனை என்னவாக ஆக்குகின்றீர்கள் என்பதைப் பாருங்கள்? அவர் அதனோடு ஒரு தொடர்பும் ஒரு போதும் கொண்டிருக்க வில்லை . 60சிருஷ்டிகராகிய தேவன் கன்னி மரியாளை நிழலிட்டார், அவளுடைய கருப்பையில் செல்களை சிருஷ்டித்தார். இம்மானுவேல் எனப்பட்ட ஒரு மனிதனை கொண்டு வந்தார். எந்த ஒருவரின் உதவியுமின்றி தேவன் தாமாகவே நம் மத்தியில் மாம்சமானார். முதல் மனிதனை உருவாக்கின சிருஷ்டிகர் அவரே. ஆமென். ஓ என்னே. அங்கே அவர், அங்கே அவர் நிற்கிறார். ஆம். ஐயா, அதன்பிறகு அவரால் தடுப்பு மருந்தை கொண்டு வர முடிந்தது. எந்தவொரு உண்மையான நல்ல விஞ்ஞானியும், நல்ல மருத்துவரும் ஒரு வியாதியை காணும் போது, அவர்களில் சிலர் சிறைச்சாலைக்கு சென்று ஆயுள் தண்டனை பெறும் சில மனிதர்களில் அதனை முயற்சிப்பார்கள். அவன் அந்த தடுப்பு மருந்தை தாக்குபிடிப்பானானால் ஏன் அந்த விஷம் அவனைக் கொன்று போடாவிட்டால், அவன் விடுதலை பெற்றுச் செல்ல முடியும், ஏனென்றால் அவன் தடுப்பைப் பெற்றுக் கொள்ளத் தயாரானான். கைதிகள் அதற்காக காத்திருப்பார்கள். ஓ, அது ஒரு மருத்துவர் அவருடைய மருந்தைக் குறித்து பயப்படுதல். 61ஆனால் உங்களுக்குத் தெரியுமா, தேவன் தம்முடைய சொந்த மருந்தைக் குறித்துப் பயப்படவில்லை (ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி) ஒரு மாட்டுத் தொழுவத்தில், ஒரு மனிதன் யோர்தானின் கரையோரம் நின்று கொண்டிருந்தார். அங்கே தடுப்பு மருந்து விழுந்த போது பரலோகத்திலிருந்து புறா இறங்கி வருவதாக அவன் கண்டான். அவர் தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்டார். ஒரு சத்தம் “இது என்னுடைய நேசக்குமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்” என்று கூறினது. ஆமென். தேவன் மனிதனுக்குள் அதுவே தடுப்பு மருந்து. தேவன் ஒரு மனிதனுக்குள் உலகம் அவரை கவனித்தது. ஒவ்வொரு சோதனையும் அவர் சகித்தார். அவர்கள் அவர் முகத்தில் துப்பின போது, தாடியை வெளியே இழுத்த போது, அவர் மீது துப்பினபோதும் சகித்தது. சோதனை நேரங்களில் அது சோதனையை சகித்தது. அது செய்தது. யோர்தானில் அவர் பெற்றுக்கொண்ட தடுப்பு மருந்து அதைச் செய்தது. புகழ் நேரத்திலும் புகழின் சோதனையை அது சகித்தது. 62இன்று அனேக சபைகளின் காரியம் என்னவாயிருக் கிறது? தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறார், அவர்கள் துவங்குகிறார்கள் ..... அதுவே நம்முடைய பெந்தேகோஸ்தே ஜனங்களை நோகச் செய்கிறது. நாகரீகத்தைப் போலவே தங்களையும் நடப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள், இன்றைக்கு கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த பெரிய சவக்கிடங்குகளில் உட்கார்ந்திருப்பதைக் காட்டிலும் ஒரு தகர டப்பாவை அல்லது ஒரு கஞ்சிராவை எடுத்துக் கொண்டு அங்கே ஏதோ ஒரு தெருவின் மூலையில் நின்றுக்கொண்டு கஞ்சிராவை அடித்துக் கொண்டிருந்த நம் முற்பிதாக்களைப் போல இப்பெந்தெகொஸ்தேயினர் திரும்பவும் சென்று அதே விதமாகத்தான் இருக்க வேண்டியவர்களாக உள்ளனர். பெந்தெகொஸ்தே சபையின் மேய்ப்பர்களாகிய நீங்கள் உட்பட, உங்களை சுத்திகரிக்கின்ற ஒரு நல்ல பழமை நாகரீக பாணி பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதல் தான் நமக்கு தேவையாயுள்ளது. அது சரி. இப்பொழுது அதன் காரியம் என்னவெனில் அவருடைய ஞானஸ்நான நாளில் பரிசுத்த ஆவி இயேசுவின் மீது வந்த போது, அவர் தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டார். அவரை நாம் சோதனை நேரத்தில் கவனித்திருக்கின்றோம். பிசாசு அவருக்கு உலகத்தின் இராஜ்யங்களைத் தர முயன்ற போது, அவர் என்ன செய்தார்? அவர் வார்த்தையுடன் சரியாக அங்கே தரித்திருந்தார். ஆமென். 63இன்று நான் வியப்புறுவது என்னவெனில், இந்த கடைசி நாள் எழுப்புதலுக்கு பிறகு ஊழியக்களத்தில் உள்ள அனேக சகோதரர்கள் ..... நீங்கள் சில காசுகளைப் பெறும் பொழுது அல்லது அணிந்து கொள்ள ஆடைகளைப் பெறும் பொழுது, நீங்கள் ஏதாவது ஒரு இடத்திற்கு போக முடியாதபடிக்கு பெரிய ஆளாகி விடுகிறீர்கள், ஓ, ஒரு முக்கியஸ்தராகி விடுகிறீர்கள், மற்றவர்கள் கொண்டுள்ளதைக் காட்டிலும் நீங்கள் பெரிதான ஒன்றைக் கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது. ஏன் இப்படி? பெரிதாக ஆக வேண்டும். அது ஒரு அர்த்தமற்ற, பிரயோஜனமற்ற, நாற்றமெடுக்கும் வழக்கமான போட்டி ஆகிவிட்டது. அது அவமானம் ஆகும். தன்னைத் தாழ்த்திக் கொண்டு, ஒரு இடத்திற்குச் சென்று அவனிடம் அவர் பேசத்தக்கதாக ஏதுவாக இருக்கும் ஒரு மனிதன் தான் தேவனுக்குத் தேவையாயிருக்கின்றது. ஆனால் அவர்களுடைய காரியங்கள் அர்த்தமற்ற, பிரயோஜனமற்ற நாற்றமெடுக்கும் போட்டியாக ஆகிவிட்டது. ஒவ்வொருவரும் மற்ற நபரை விட ஏதோவொரு விதத்தில் பெரியவர்கள் ஆகும்படி முயற்சிக்கிறார்கள். பாருங்கள், புகழ் என்னும் சாத்தானின் சோதனையை. அவர்களால் எதிர்க்க முடிவதில்லை. 64ஆனால் நம்முடைய கர்த்தர் சோதனையை எதிர்த்து நின்றார். தடுப்பு மருந்து மேற்கொண்டது. வேத வசனத்தைக் குறித்து வாக்குவாதம் ஏற்பட்ட நேரம், அவர் சரியாக வார்த்தையுடன் தரித்திருந்தார். சாத்தான் “எழுதியிருக்கிறது” என்றான். அவர் சொன்னார் “இதுவும் கூட எழுதியிருக்கிறது”. 'ஓ' இது .இ... மகிமை! தேவன் மனிதனுக்குள், பாருங்கள்? அவர் எதை உடையவராயிருந்தார்? அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் கொடுக்க அவர் ஏதோவொன்றை உடையவராயிருந்தார். அவர், “நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாமலிருந்தால் என்னை விசுவாசிக்க வேண்டாம். ஆனால் உங்களால் என்னை விசுவாசிக்க முடியவில்லையென்றால், அவர் என் மூலம் நடப்பிக்கும் கிரியைகளையாவது விசுவாசியுங்கள், விசுவாசியுங்கள்” என்றார். ஓ! என்னே! உங்களுக்குப் புரிகின்றதா. 65இன்றைய நம்முடைய தேவை என்னவெனில் பரிசுத்த ஆவியின் அடையாளங்களைக் கொண்டு உலகத்தாரின் வாயை அடைக்கக் கூடிய மனிதர்களும், ஸ்திரீகளுமே. அப்படியான ஒரு காம்ப் கூட்டம் நமக்குத் தேவை. ஒரு தலைகீழ் திருப்பிப் போடுதல் நமக்குத் தேவை. இந்தக் கடைசி நாட்களில் சபைக்குள் வந்திருக்கின்ற காரியங்கள் மற்றும் உலகப் பிரகாரமான அதிகமான காரியங்கள் குலுக்கப்பட்டு சபையிலிருந்து வெளியே எடுத்துப் போடப்பட வேண்டிய குலுக்குதல் தேவையா யிருக்கிறது. பணம் இன்று நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்றது. மற்றும் பெரிய காரியங்கள். அது ஜனங்களின் சிந்தையை தேவனுக்குப் பதிலாக பெரிய காரியங்களில் நிலை கொண்டிருக்கச் செய்கின்றது. சமரசம் செய்து கொள்ளுதல், வேத வசனங்களுடன் சமரசம் செய்து கொள்ளுதல் ...... முன்பு அவ்விதம் செய்யமாலிருந்த எந்த ஒரு சகோதரனும் அந்த வழியில் தான் ஆரம்பிக் கின்றார்கள், ஆனால் ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் பிரபலமாகி, தான் விசுவாசித்ததை சமரசம் செய்துவிட்டு விடுகிறான். உண்மையாக பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்த மனிதர்களுக்குள் அந்த விதமான இரத்தம் ஓடுவதேயில்லை. நரகத்தில் உள்ள அனைத்து பிசாசு களுக்கும் அவனை அந்த வார்த்தையில் தடுமாறச் செய்ய முடியாது. அவன் எதைக்குறித்தும் கவலை கொள்ளாமல் என்னவானாலும் அவன் அதில் நிலைத்திருப்பான். ஆமென். பவுல் சொன்னான் “ நிகழ்காலமோ, எதிர்காலமோ அல்லது எந்த ஒன்றுமே தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்காது” என்று மெய்யாகவே அந்த உண்மையான, அசலான பரிசுத்த ஆவியின் பிறப்பு ஒரு மனிதனுக்குள் வரும் போது, அவன் ஒரு தேவகுமாரன். அவனுக்கும் தேவனுக்கும் இடையே பிளவே இல்லை. அவருடைய சமூகத்தில் அவன் அவருடைய குமாரன். ஆமென். நான் அதை விரும்புகிறேன். அது சரியென்று எனக்குத் தெரியும். அது சரியே. 66உலகத்தின் காரியங்களின் பேரில் சோதனையின் நேரத்தில் அந்த தடுப்பு மருந்தானது நம்மைக் காத்து பலனளித்தது என்று நாம் அறிந்து கொண்டோம். பரிசுத்த உருளையன் என்று அழைக்கப்பட்டு பரிகசிக்கப்பட்டு, கிழிந்த பழைய துணியால் அவருடைய முகத்தையும் கண்களையும் மூடி, ஒரு கொம்பினால் அவருடைய தலையை அடித்து, “இப்பொழுது நீ ஒரு தீர்க்கதரிசி என்றால் உன்னை அடித்தது யார் என்று எங்களுக்கு கூறு” என்றனர். அவர் மக்களுடைய சிந்தனைகளைப் பகுத்தறிந்ததை அந்த ரோம போர்வீரர்கள் கண்டிருந்தனர். அங்கே நின்று ..... இன்றிரவு அவர் இங்கு நின்று கொண்டிருப் பாரெனில், அவர் சுற்றிலும் பார்த்து, அந்த ஸ்திரீயிடம் என்ன குறை என்பதை கூறுவார், இது மற்றும் அது என்ன என்ன கோளாறு உள்ளது என்றும் இது மற்றும் அது என்னவென்றும் அவர் கூறுவார். அந்த விதமாகத்தான் அவர் அதைச் செய்தார். இப்பொழுதும் அதே விதமாகத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர் மாறுவதே யில்லை. ஆமென். நீங்கள் மகிழ்ச்சி கொள்கிறீர்களா? அவர் ஜீவிக்கின்ற தேவன். கூரையிலிருந்து ஒரு மனிதன் விழுந்து, ஜீவன் அவனை விட்டுச் சென்ற பிறகு, தேவனை தனக்குள்ளாகக் கொண்டிருந்த ஒரு மனிதன் அவன் மீது விழுந்து அவனை அணைத்த போது அவன் மறுபடியும் ஜீவித்தான். அந்த அதே தேவன் இன்றிரவும் ஜீவிக்கின்றார். ஆமென். அவர் மாற்றமடையாத தேவன். சபைக்கு தடுப்பு மருந்து அவசியமாயுள்ளது. அது சரி. 67டேவிட் டுப்ளெஸிஸ் ஒரு முறை சொன்னது போல், தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது. அது சரி, நம்முடைய பெந்தேகோஸ்தே சகோதரர்கள் அவர்களது பிள்ளைகள் சபைக்கு வந்து வெறுமனே “நல்லது, எங்கள் தகப்பனார் பெந்தேகோஸ்தே ஆனதால் நாங்களும் பெந்தகோஸ்தயினர்'' என்று கூறுகின்றனர். தகப்பன் பெந்தேகோஸ்தேவாக இருந்து பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றிருந்தால், தகப்பனார் பெற்றுக் கொண்டது போல நீங்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது. அவருக்கு குமாரர்களும், குமாரத்திகளும் மட்டுமே உள்ளனர். அவருக்கு பேரன்களும், பேத்திகளும் கிடையாது. வெறும் குமாரர்களும், குமாரத்திகளும் மாத்திரமே. அது உண்மை. ஆகவே பெந்தேகோஸ்தே நாளில் அவர்கள் செய்த அதே காரியத்தை நீயும் செய்யத்தான் வேண்டும். அதே அனுபவத்தை நீயும் கொண்டிருக்கத்தான் வேண்டும். அவர்கள் கொண்டிருந்த அதே காரியத்தை நீயும் கொண்டிருக்கத்தான் வேண்டும். தேவன் தம்முடைய திட்டத்தை ஒரு போதும் மாற்றுவது கிடையாது. அவர் தம்முடைய வழிகளை ஒரு போதும் மாற்றுவதே கிடையாது. அவர் எல்லா நேரத்திலும் அதே காரியத்தையே செய்கிறார். தம்முடைய திட்டத்தை அவர் வகுத்திருக்கும் விதமாவது ஒவ்வொரு சமயத்திலும் அதே விதமாகத்தான் அது நடைபெற வேண்டும் என்கின்ற விதத்தில் தான் உள்ளது. அது அதே விதமாகத்தான் இருக்க வேண்டும். நீயும் அதே காரியத்தைச் செய்தால், அதே பலன்கள் வரும், ஆமென். அது சரி. 68இப்பொழுது, சோதனை நேரத்தில் அது தாங்கு கின்றது என்று கண்டோம். எல்லா காரியமும் தவறாகப் போன போதிலும் அது தாங்கினது. அவருடைய நண்பர்கள் எல்லோரும் கைவிட்ட போதும் அது தாங்கினது. அவர் இன்னுமாக உறுதியாகத் தாங்கி நின்றார், அந்த தடுப்பு மருந்து தாங்கிப் பிடித்தது. அப்பொழுது பிசாசு, “இதோ, அவரைப் பிடித்து விட்டேன்” என்று நினைத்தான். அவன் கல்வாரியைத் துவக்கினான். அவர் சரீரத்திலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடத்துவங்கினது. அவரின் மேல் சுற்றப்பட்டிருந்த ஆடையானது ஒரு பெரிய இரத்த அலை போல இருந்தது. அந்த பிசாசு, “இப்பொழுது நான் அவரைப் பிடித்து விட்டேன். நிச்சயமாக அது தேவனாக இருக்க முடியாது. நிச்சயமாக, நிச்சயமாக கிடையாது. அது அவராயிருக்க முடியாது, போர் சேவகர்களை தம்முடைய முகத்தில் துப்ப அனுமதிப்பாரெனில், அவர்கள் அவரிடம் ஒரு தரிசனத்தை காணும்படி சவால் விட்டும் கூட, அவரால் செய்ய முடியவில்லை. அவருடைய முகத்திலிருந்து கையளவு தாடியை பறித்து போட அனுமதிப்பாரெனில் அவர் தேவனாயிருக்க முடியாது. இப்பொழுது இங்கே இவர் சிலுவையை சுமந்து கொண்டு மலையில் ஏறிச்சென்று கொண்டிருக்கின்றார். இன்னும் சில நிமிடங்களில் நான் அவரைப் பிடித்து விடுவேன்” என்று கூறியிருப்பான். 69அந்த மரணக் குளவி அவரை கொட்டும் படி சுழன்று கீழே வந்தது. உங்களுக்குத் தெரியும், எந்தவொரு குளவிக்கும் கொடுக்கு உள்ளது என்று, ஆனால் பாருங்கள் அந்நேரத்தில் தேவன் ஒரு மாம்சத்தை வைத்திருந்தார். அது தேவனுடைய மாம்சமாயிருந்தது. அந்த கொடுக்கு ஒரு முறை தேவகுமாரனில் இம்மானுவேலுக்குள் நங்கூரமிடப் பட்டபோது, அந்த குளவி வெளியேற முயற்சித்த போது அதனிடத்தில் கொடுக்கு இல்லை. அவர் அந்த கொடுக்கை மரணத்திடமிருந்து சரியாக பிடுங்கி விட்டார். “மரணமே உன் கூர் எங்கே”? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்“ என்று பவுலினால் கூற முடிந்ததில் வியப்பொன்றுமில்லை. அவனால் எலியாவைக் கொட்ட முடிந்தது. மரணத்தைத் தர முடிந்தது. அவன் எலியாவைக் கொட்ட முடிந்தும், அவனுடைய கொடுக்கு அவனை விட்டு போகவில்லை. ஒரு குளவி ஆழத்தில் கொடுக்கை செலுத்தினால் அதனுடைய கொடுக்கை அது இழந்து விடும். ஆகவே அதன் கொடுக்கை வெளியே எடுத்துவிடும். ஆகவே அவன் நங்கூரமிட ஒரு மனித சரீரமும் இல்லை . ஓ, என்னே ! அவன் நங்கூரமிட ஒரு வரும் கிடையாது. அந்நேரம் அவன் இம்மானுவேலுக்குள் புகுத்தினபோது அவன் தன்னுடைய கொடுக்கை இழந்து விட்டான், தேவனுக்கு நன்றி! ஆம், ஐயா, அந்த ஒன்றில் அவன் தோல்வியடைந்தான். ஆம் ஐயா. 70விஷம் மேற்கொண்டதை அவர்கள் கண்டு கொண்டார்கள், அவர்கள் “நீ தேவனுடைய குமாரனே யானால் சிலுவையிலிருந்து இறங்கி வா” என்று கூறினார்கள். பிரதான ஆசாரியன், சபையின் பெரிய மனிதர்கள் நீர் தேவனுடைய குமாரனேயானால் எங்களுக்குச் சொல்லும், சிலுவையை விட்டு இறங்கி உன்னையே காப்பாற்றிக்கொள்'' “நீ தேவனுடைய குமாரனாவென்று நாங்கள் காணட்டும்” என்றார்கள். அவர் ஒரு போதும் தன் வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. இப்பொழுது அவர் மரித்தாரென்று நாம் காண்கிறோம். அவர் மெய்யாகவே மரித்தார். அவர் மரித்தாரென்பதை சூரியனும் சந்திரனும் அறிவித்தது. இயற்கை அனைத்தும் அவர் மரித்தாரென்பதைக் கூறினது. பூமி அதிர்ந்தது. அதற்கு நடுக்கமும் பயமும் ஏற்பட்டது. பூமியை சிருஷ்டித்த அதே தேவன், பூமியின் மீது தொங்கிக் கொண்டிருந்தார். இம்மானுவேலின் இரத்தம் நிலத்தில் சிந்திக் கொண்டிருந்தது. அவர் மரித்ததில் வியப்பொன்று மில்லை. அவர் மரித்துவிட்டார் என்பதை ஒவ்வொன்றும் கூறினது. 71பிறகு நாம் பார்க்கும் போது, அவர் மரிக்கும் முன்பாக அவர் “நீங்கள் இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள். மூன்றாம் நாளில் நான் அதை எழுப்புவேன்”. உங்களால் அதை ஒரு போதும் கீழே வைத்திருக்க முடியாது. அதை அழித்து விடுங்கள். மூன்றாம் நாளிலே நான் அதைத் திரும்ப கொண்டு வருவேன்“ என்று அவர் கூறினார். அந்த தடுப்பு மருந்து மேற்கொள்ளுமாவென்று காண அவர்கள் சுற்றிலும் காவல் ஏற்படுத்தினர். பாவத்தின் சோதனையை அது மேற் கொண்டதை அவர்கள் கண்டிருந்தனர். அது வறுமையை எதிர்கொண்டது. அது ஐசுவரியத்தை மேற்கொண்டது. எல்லாவிதமான சோதனைகளையும் அது மேற்கொண்டது. இதுவரை மேற்கொண்டது. ஆனால் இப்பொழுது இதுவே மரணத்தி லிருக்கிறது. இப்பொழுது இது என்ன செய்யப் போகின்றது? 72ஆனால் ஈஸ்டர் காலையில், ஓ! என்னே , சூரியன் உயரே எழும்புவதற்கு முன்பாக அந்த தடுப்பு மருந்து மேற்கொண்டது. அது நிகழ்ந்த போது மரணம் தடைகளை உடைத்துப் போட்டது. கல்லறை திறந்து கொண்டது. அவர் மூன்றாம் நாள் மறுபடியும் உயிரோடெழுந்து உன்னதத்திற்கு ஏறிச் சென்றார். அது காண்பிக்கிற தென்னவென்றால் அந்த தடுப்பு மருந்து என்பது நித்திய ஜீவனின் தடுப்பு மருந்து ஆகும். உங்களால் அதை அழிக்க முடியாது. நரகத்தின் வயிற்றால் கூட அதை பிடித்து வைக்க முடியாது. மரணத்தால் அதைப் பிடித்து வைக்க முடியவில்லை. எந்த ஒன்றாலும் அதைப் பிடித்து வைக்க முடியாது. அது மறுபடியும் எழும்பி விடும். இயேசு கிறிஸ்து “பிதா எனக்கு தந்த யாவும் என்னிடத்தில் வரும். மேலும் நான் அவனை கடைசி நாளில் மீண்டும் எழுப்புவேன்” என்றார். அல்லேலூயா! ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ இந்தத் தடுப்பு மருந்தைப் பெற்றிருந்தால், கல்லறையில் தரித்திருக்க முடியாது. நீதிமானைப் பிடித்து வைக்க எந்த ஒரு கல்லறையாலும் முடியாது. எந்த ஒரு பாதாளத்தாலும், எந்த ஒரு கல்லறையாலும், எந்த ஒன்றினாலும் அதைப்பிடித்து வைக்க முடியாது. அந்த நாளில் மீண்டும் எழுப்பப் போவதாக இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் பண்ணினார். ஆமென். ஓ, அந்த தடுப்பு மருந்தைக் குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஈஸ்டர் காலையில் அது நிரூபணமாகிவிட்டது. 73அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு மகத்தான காரியமாக இருந்ததினால் நூற்று இருபது பேர் அதைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். இப்பொழுது, அவரால் தம்மைச் சோதனையினூடாகக் கடந்து காத்துக் கொள்ள முடிந்ததினால், அவரை மிகவும் நன்றாக அறிந்திருந்த நூற்று இருபது பேரும் அந்த தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ள விருப்பமாக இருந்தனர். ஆகவே அப்பொழுதே அவர் ஆய்வகத்திற்கு சென்று தடுப்பு மருந்தின் திரவத்தை உண்டு பண்ண வேண்டியதாயிருந்தது. ஆகவே அவர் “அந்த திரவத்தின் மூலக்கூறு சூத்திரத்தை நான் பெற்று அந்த திரவத்தை பெறும் வரை எருசலேம் நகருக்கு சென்று காத்திருங்கள். அதை மேலிருந்து உங்களுக்கு அனுப்பப் போகிறேன்'' என்று கூறினார். ஆகவே அவர்கள் மேலே காத்திருக்க சென்றார்கள். கிறிஸ்துவ சபை எப்படி நடத்தப்படவேண்டும், என்ன விதமான தடுப்பு மருந்தை அது பெற வேண்டும்? எந்த விதமான தடுப்பு மருந்து? எப்படி அவர்கள் செய்கிறார்கள்? என்ன சம்பவிக்க வேண்டும்? அவர்கள் வேதாகமக் கலாசாலைக்கு சென்று Ph.D., LLD பட்டங்களை பெற வேண்டுமா? சில பாதிரியார் வீதியின் வழியே கோஷேரை (Kosher) கையில் எடுத்து வரும் பொழுது நாக்கை வெளியே நீட்டி இராபோஜனத்தை எடுத்தால் அது மட்டும் போதுமா? 74ஆனால் பலத்த சத்தம் வானத்திலிருந்து உண்டாகி, “அந்த தடுப்பு மருந்து பாதை வழியாக வந்து கொண்டிருந்தது, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு ஆவியானவர் தங்களுக்கு தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். பழைய தேவாலயத்தில் படத்தை எப்பொழுதாவது நீங்கள் கண்டதுண்டா? அங்கே ஒரு சிறிய பக்கவழிக்கதவு, மாடிப்படிகள் வழியாக சென்று மேலறை வீட்டில் முடிவடையும். அவர்கள் கதவுகளை மூடி உள்ளே சென்றனர். ஏனெனில் அவர்கள் பயந்திருந்தனர். ஆனால் நான் உங்களிடம் கூறுகிறேன். அவர்கள் தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்ட போது, அடையாள மிடப்பட்ட இளங்காளையைப் போல், அவர்களால் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இல்லை ஐயா, அந்த அறையிலிருந்து அவன் வெளியே வந்து, வெளியே வீதிகளில் அவன் சென்றான். அவனுக்கு தடுப்பு மருந்து ஏற்றப்பட்டிருந்தது. மரணம், நரகம், உபத்திரவம், பரிகாசம், கேலி செய்தல், அவனுக்குள் ஒரு வித்தியாசமும் உண்டாக்கவில்லை. அவன் தடுப்பு மருந்து செலுத்தப் பட்டிருந்தான். ஆமென். ஓ, என்னே ! 75பேதுரு அங்கு நின்று கொண்டிருப்பதை கவனியுங்கள். அவர்கள் கேட்கத் துவங்கினார்கள், “கீலேயாத்தில் வேறே பிசின் தைலம் இல்லையோ? கிலேயாத்தில் வேறே பிசின் தைலம் இல்லையோ? அங்கே வைத்தியன் இல்லையா?” ஓ, சரியாக, நாம் அனேகம் பிசின் தைலத்தை கிலேயாத்தில் வைத்துள்ளோம். நம்மிடம் அனேகம் மருத்துவர்கள் உள்ளார்கள். அந்த நாளில், வைத்தியர் சீமோன் பேதுரு, அவன் ஒரு மருத்துவர். அவன் கூறினான்“ நான் உங்களுக்கு ஒரு மருந்து சீட்டு எழுதப்போகிறேன், நான் உங்களிடம் கூறுகிறேன். இது ஒரு நித்திய மருந்துச்சீட்டு, ஏனெனில் இது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் வெளிப்படையாகக் கூறுவோமானால், உங்கள் தேவனாகியக் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிற ஒவ்வொருவருக்கும், நம்முடைய தேவன் வரவழைக்கும் ஒவ்வொருவருக்கும் 'நான் அவனுக்கு இதை அளிக்கிறேன்'. “தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றார்கள். இதோ அவள் தெளிவாகப் புரிந்து கொண்டாள்“. தடுப்பு மருந்து செலுத்தப்பட நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” அவன் “நான் மருந்து சீட்டை எழுதுகிறேன்'' என்றான். அவன் ”மனந்திரும்பி நீங்கள் ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். இந்த மருந்துச் சீட்டு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய கர்த்தராகிய தேவன் தூரத்திலிருந்து வரவழைக்கும் யாவருக்கும்“ என்றான். ஓ என்னே! . 76என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு மருத்துவர் ஒரு வியாதிக்கு பரிகாரத்தை கண்டுபிடிக்கும் பொழுது, அவர் ஒரு மருந்துச் சீட்டை எழுதித் தருகின்றார். ஆனால் சில போலி மருந்து விற்பனை செய்பவன் அந்த சீட்டை எடுத்து, அதில் குறிப்பிட்டவைகளுடன் சிறிது இதைச் சேர்த்து மற்றும் சிறிது அதை எடுத்தும் விடுகின்றான். அவ்விதம் செய்யும் போது அவன் அந்த நோயாளியை கொன்று போடுவான் அல்லது அதனோடு ஏதாகிலும் செய்து விடுவான். அந்த மருந்து சீட்டில் நன்மை பயக்கக்கூடிய போதிய மருந்து இல்லை. அது இல்லையெனில் அது மிகவும் பலவீனமடைந்து விடும். உங்களால் அந்த நோயாளிக்கு உதவ முடியாது. அனேகம் வேதாகமக் கல்லூரி மருந்து விற்பனை யாளர்களின் இன்றைய காரியம் அதுவாயிருக்கிறது. அவர்கள் அந்த மருந்து சீட்டை எடுத்து, அதில் உள்ளவை களுக்கு பதிலாக ஏதோவொன்றை சேர்த்து விடுகிறார்கள். ஆகவே நீங்கள் ஒரு கூட்டம் அழிவடையும் சவ அறைகளை (Morgues) பெற்றுள்ளீர்கள். 77அந்த மருந்துச்சீட்டு இன்று வரை மாறாததாயுள்ளது. சமாரியர்கள் அதை பெற்றுக்கொண்ட போது, அவர்கள் தடுப்பு மருந்து செலுத்தப்பெற்றார்கள். அவர்கள் அதே காரியத்தை பெற்றிருந்தார்கள். புறஜாதிகள் அதை பெற்றுக் கொண்ட போது அவர்கள் அதே மருந்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டார்கள். பவுல் அப்.19-ல் ஒரு கூட்டத்தை சந்தித்த போது, அவர்கள் அந்த மருந்துச் சீட்டின் ஒரு பகுதியை உடையவர்களாயிருந்தனர். ஆனால் முழுவதும் அல்ல, அவன் “அது பலன் தராது. நீங்கள் முழு காரியத்தையும் கொல்லப்போகிறீர்கள்” என்றான். ஆகவே அவன் அவர்களுக்காக அந்த மருந்துச் சீட்டின் மீது எழுதினான், அதை அவர்கள் எப்படி பெற்றுக்கொள்வது. அவர்களும் அந்த வழியில் அதைப் பெற்றுக் கொண்டார்கள். இன்றைக்கும் அதுவே காரியம். அனேக பிசின் தைலம் கிலேயாத்தில் உள்ளது. மேலும் அனேகம் வைத்தியர்களை நாம் பெற்றுள்ளோம். ஆனால் ஜனங்கள் மருந்துச் சீட்டைக் குறித்து பயப்படுகின்றனர். மகிமை! தேவனுக்கு ஸ்தோத்திரம். கீலேயாத்தில் பிசின் தைலம் இல்லையோ? பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லையோ? இப்பொழுது இல்லையோ? இந்த தடுப்பு மருந்து எல்லோருக்கும் பலனளிக்கும். பாருங்கள். அது யூதர்களிடத்தில் செய்தது. அது சமாரியரிடத்திலும் பலனளித்தது. அது புறஜாதி களிடத்திலும் பலனளித்தது. அது ஒவ்வொருவரிடத்திலும் அந்த வழியிலே பலனைத் தருவதாயுள்ளது. 78நான் ஒரு மிஷனரி. வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத ஜனங்கள் உள்ள நாடுகளுக்கு செல்கின்றேன். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் போது, நீங்கள் செய்கின்ற அதே காரியத்தைத் தான் அவர்களும் செய்கிறார்கள். ஓ அது என்ன? “ இது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய கர்த்தராகிய தேவன் வரவழைக்கும் யாவருக்கும்” அதே மருந்து சீட்டு. அதே காரியத்தை செய்கிறது. சபை ஆதியில் புரிந்த அதே காரியத்தையே செய்யும். அங்ஙனமே சரியாக. இயேசு தான் செடி, நாம் கிளைகள். செடியிலுள்ள அந்த ஜீவனால் தடுப்பு மருந்து செலுத்தப் பட்டுள்ளோம். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சபை வெளியே சென்றது, அதன்பிறகு அப்போஸ்தலர் செய்த கிரியைகள் ஒரு புஸ்தகமாகவே எழுதப்பட்டது. 79இப்பொழுது நாம் சில பதிலீடுகளை பெற்றுள்ளோம். சில ஒட்டுப்போடப்பட்ட கனிகளை நாம் பெற்றுள்ளோம். இது மரத்தின் ஜீவனைக் கொண்டு உயிர்வாழும். ஆனால் கனிகளைப் பிறப்பிக்காது. அது சரியே! சில நாட்களுக்கு முன்னர், பீனிக்ஸில் என்னுடைய நண்பன் ஜான் ஷாரிட்டுடன் நின்று கொண்டிருந்தேன். அவரிடம் அங்கே ஒரு மரம் இருந்தது. ஒரு ஆரஞ்சு மரம், அதற்கு சுமார் ஐந்து அல்லது ஆறு வித்தியாசமான தன்மையுள்ள பழங்கள் இருந்தது. நான் “அப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டதே யில்லை ” என்றேன். அவர் “அவைகள் ஒட்டுப் போடப் பட்டவை” என்றார். நான் “அது எப்படிப்பட்ட மரம்?” என்றேன். அவர் “ஆரஞ்சு” என்றார். நான் “நல்லது, அங்கே எலுமிச்சை பழம் மற்றும் எலுமிச்சை செடி, சிறிய ஆரஞ்சுபழங்கள், மற்றும் திராட்சைபழம் போன்ற அனேக வித பழங்கள் உள்ளதே'' இவைகள் எல்லாம் அந்த அதே மரத்திலிருந்து எழும்பினவைகளா?” என்று கேட்டேன். அவர் “ஆம் இவைகளெல்லாம் புளிப்புத் தன்மையுள்ள பழங்கள்” என்றார். நான் “நல்லது, இப்பொழுது அது ஒரு வினோதமான காரியம்” நான் இப்பொழுது இந்த வருடம் பழங்கள் எல்லாம் தோன்றி மறைந்த பிறகு, அடுத்த வருடம் அது ஆரஞ்சை தோன்றப்பண்ணுமா?“ என்று கேட்டேன். அவர் “ஓ இல்லை , ஹஹ் - இல்லை ” “அந்தக் கொம்பின் தன்மையைப் பொறுத்தே அது தோன்றும்” என்றார். மேலும் நான் சொன்னேன் “பிறகு அந்த மரம், ஆரஞ்சு மரத்திலிருந்து என்னவாக மாற்றமடைகின்றது ...” அவர் சொன்னார், “இல்லை, இல்லை, இல்லை அது வேரோடு கொம்பை தோன்று பண்ணுமானால் அது ஆரஞ்சைத் தோன்றப்பண்ணும்”. நான் 'எனக்கு புரிகிறது“ என்றேன். ஆமென். 80சகோதரனே, ஸ்தாபன சபைகளால் திணிக்கப்பட்ட இப்படிப்பட்ட காரியங்களை நாம் கொண்டுள்ளோம். அவைகளின்படி வாழ்ந்து கொண்டு, தங்களை கிறிஸ்துவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அந்த மரத்தின் உண்மையான ஜீவன் தன்னுடைய வேரோடு சொந்த கிளையை தோன்றப் பண்ணுமானால் அதற்கு பிறகு இன்னொரு அப்போஸ்தலர் நடபடிகைகள் புஸ்தகம் இருக்கும். ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். உலகம் அதன் செல்வங்கள், இப்படிப்பட்டவைகளைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஜனங்கள் வேதாகமத்தை வாசிக்கின்றார்கள். நீங்கள் இதை ஸ்தாபனக் கருத்தின்படி வாசிப்பீர்களானால் இதிலிருந்து அதிகமாக உங்களால் ஒன்றும் பெற முடியாது. ஆனால் இது என்ன சொல்கிறது என்று சற்று நோக்குவீர்களானால், பிறகு அந்த மருந்து சீட்டு என்ன சொல்கிறது என்பதற்கு கீழ்ப்படிவீர்களானால் இதை வாசியுங்கள், இதற்கு கீழ்ப்படியுங்கள். இது வித்தியாசமான மனிதனை உருவாக்கும். 81நான் இந்தியாவிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். இங்கே உள்ள ஒரு ஸ்திரீயை பற்றி கேள்விப்பட்டேன். அவள் வறுமையினால் பீடிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய மகன் ஒரு மருத்துவராக ஆக எண்ணி, இந்தியாவுக்குச் சென்றிருந்தான். அவன் அங்கே சென்று, அவன் மருத்துவபணியை விட்டு வேறொன்றிலே சேர்ந்து விட்டான். அவன் ஒரு மின்ன ணு பொறியாளர் (Electrical Engineer) என்று நினைக்கிறேன். அல்லது ஏதோவொன்று இந்த ஸ்திரீயோ வறுமையில் வாடிக்கொண்டிருந்தாள். அவளிடத்தில் ஒன்று மேயில்லை. ஆகவே தொண்டு நிறுவனங்கள் அவளை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆகவே அவர்கள் அந்த காரியத்தை விசாரித்தனர். அவர்கள் அந்த ஸ்திரீக்கு உதவக்கூடியவர் ஒருவர் உண்டு என்பதை கண்டு பிடித்தனர். இந்தியா விலுள்ள பெரிய செல்வந்தனான அவளுடைய மகன் தான் அது. “நல்லது, ஏன் உங்கள் மகன் உங்களுடைய மகன் உங்களுக்கு உதவவில்லை”. அவள் “ஓ, நான் அவனிடத்தில் கேட்க முடியாது” என்றாள். “நான் அவனுடைய தாய்” “என்னுடைய மகனிடத்தில் கேட்பதை விட பிச்சை வாங்கிக் கொள்வேன்” என்றாள். “அவனிடத்திலிருந்து உங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லையா? என்று கேட்டனர். அவள், “ஓ, குறைந்தது ஒன்று (அ) இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அவனிடத்திலிருந்து செய்தி வரும்”. “நீங்கள் வாசித்தவைகளில் மிகவும் இனிமை யான சில கடிதங்களை எழுதுவான்”. என்றாள். “நல்லது அவனிடத்தில் தாராளம் பணமிருந்து, தன்னுடைய தாயை இவ்வளவாய் நேசிப்பது போல் காணப்படு மென்றால், தன்னுடைய தாயை பிச்சைக்கு அனுப்பாமல் அவளை கவனித்துக் கொள்ள முயற்சிப் பானல்லவா” என்றனர். நல்லது, நான் இந்த நிலைமையில் இருப்பதை அவன் அறிவானென்றால், அவன் என்னைக் காப்பாற்ற முயற்சி செய்வான்“ மேலும் ”உங்களுக்குத் தெரியுமா, அவனுக்குத் தெரியாது, மேலும் நான் நான் இதனை என் மகனிடம் கூற வெட்க முறுகிறேன்“ என்றாள். அவன் இன்னமும் உங்களுக்கு இனிமையான கடிதங்கள் எழுதுகிறானா?“ “ஓ சில மிகவும் இனிமையான கடிதங்கள்” மற்றும் “நீங்கள் இதுவரை கண்டவைகளில் மிகவும் அழகான படங்கள் அவன் அனுப்புவான்”. “மிகவும் அழகான படங்களா? ஆகவே அவைகளில் சிலவற்றை நாங்கள் காணட்டும்?” அவள் வேதாகமத்திற்குள்ளேயிருந்து அவைகளை வெளியே உருவினாள். அவைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? வங்கிக் காசோலைகள். இந்தியாவில் வங்கிக் காசோலைகளில் படங்கள் போடப் பட்டிருக்கும். நீங்கள் பாருங்கள். அழகான படங்கள். இந்தியப் பணத்திலிருந்து அமெரிக்கப் பணத்திற்கு மாற்றப்பட்ட ஆயிரக்கணக்கான டாலர்களை அவள் வைத்திருந்தாள். அது என்ன? அவளுடைய வேதாகமத்தின் பச்கங்களுக்குள் அவள் புதையல்களை வைத்திருந்தாள். அதை அவள் “வெறும் படங்கள்'' என எண்ணினாள், ஆனால், விசாரித்து பார்க்கும் போது, அது அவளுக்கு உண்மையான மதிப்பாக இருந்தது. 82சகோதரனே, வரையப்பட்ட ஒரு பெந்தே கோஸ்தே நெருப்பை நீ விசுவாசிக்க முயற்சிக்கையில் யாராவது பரிசுத்த ஆவி பெற்றிருந்தது போல இன்றும் இல்லை என்று கூற முயற்சிக்கும் போது, அற்புதத்தின் நாட்கள் கடந்து விட்டன என்று யாராவது கூற முயற்சிக்கும் போது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் அல்ல என்று அவர்கள் உன்னிடம் சொல்ல முயற்சிக்கும் போது அதை நம்பாதே. அவைகள் படங்களல்ல. சர்வ வல்லமையுள்ள தேவன் உனக்காக அந்த செய்தியை அனுப்பியுள்ளார். அது சரி, “அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம் பிதாவாகிய தேவன் தூரத்திலிருந்து வரவழைக்கும் யாவருக்கும்”, தேவன் இன்னமும் தேவனாயிருக்கின்றார். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் சரியாக இன்றிரவு இங்கே இருக்கின்றார். இழந்து போனவர்களை மீட்க, வியாதியஸ்தர்களை சொஸ்தப் படுத்த, நிரப்பப்பட விரும்புவோர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்ப. நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்கள் இல்லையா? (சபையோர் ஆமென் என்கின்றனர் - ஆசி) ஆம் ஐயா, அதை விசுவாசித்தால் பின்னர் பாருங்கள், அது இங்கே வார்த்தையில் உள்ள தேவனுடைய வாக்குத் தத்தங்களாய் இருக்கிறது. நீங்கள் அங்கே சென்று ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் காண முடியும். வாக்குத் தத்தம் உங்களுக்காகத்தான். “வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்தில் உள்ள யாவருக்கும்” என்று பேதுரு கூறினான். அதைப் பணமாக மாற்ற பயப்பட வேண்டாம். அது ஒரு பரலோக வங்கியின் காசோலை, அது சரி, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கின்றா. 83இன்றிரவு அவர் இங்கே நின்று கொண்டிருந்து, வியாதிப் படுக்கையில் உள்ள அந்த ஸ்திரீயைக் காண்பாரெனில் அவள் மிகவும் வியாதியாக காணப்படுகிறாள் - கை கால்கள் வளைந்து, ஒரு வேளை வாத நோய் உள்ள அல்லது ஏதோவொன்று. இரண்டு ஸ்திரீகள் ... ஒரு ஸ்திரீ, ஒரு கருப்பு நிற மனிதன், மேலும் ஒரு கருப்பு நிற ஸ்திரீ. ஒரு சிறு குழந்தையுடன் நிற்க முயற்சிக்கிறார்கள். ஒரு சுகமளிப்பவராக இங்கே நின்று கொண்டு அங்கே நிற்கிற இரு வியாதியஸ்தர்களை பார்த்துக் கொண்டிருப் பாரெனில் அவர் என்ன செய்வா ரென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவரால் அவர்களை சுகப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா, நீங்கள் பாருங்கள். அவர் ஏற்கனவே செய்து முடித்து விட்டார். அவர் கல்வாரியில் மரித்த போது, அவர் அதைச் செய்து விட்டார். வியாதியுள்ளவர்களே நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? அது சரி என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அது சரி என்று நீங்கள் விசுவாகிக்கின்றீர்களா? ஸ்திரீயுடன் குழந்தையுடன் நின்று கொண்டிருக்கும் நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கின்றீர்களா. அவர் கல்வாரியில் மரித்த போது, உங்கள் குழந்தையின் சுகத்தை அவர் சம்பாதித்து விட்டார். அந்தக் கட்டிலின் மீது உள்ள நீங்கள். உங்களால் மட்டும் ..... நீ மிகவும் மோசமாக வியாதிப் பட்டிருக்கின்றாய். நீ வாத நோயினால் முடங்கி யிருக்கின்றாய். அது என்னவாயிருந்தாலும், உன்னுடைய வியாதியிலிருந்து உன்னை காப்பாற்ற, இயேசு கிறிஸ்து கல்வாரியில் மரித்தார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? நீ அதை விசுவாசிக்கின்றாயா? நான் இன்றிரவு சொன்னது சரியென்று நீ விசுவாசிக்கின்றாயா? மருந்துச் சீட்டு உண்மை என்று நீ விசுவாசிக்கின்றாயா. நீ செய்வாயா? 84இன்றிரவு அவர் இங்கே நின்று கொண்டு, நீ அவரிடம் “என்னுடைய குழந்தையை நீர் சுகமாக்குவீரா?” என்று கேட்டால் அவர் என்ன சொல்வாரென்று உனக்குத் தெரியுமா? “நான் அதை ஏற்கனவே செய்து முடித்து விட்டேன்'' பாருங்கள். நீங்கள் அதை வெறுமனே விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். பாருங்கள்? ”ஐயா, நான் முடங்கிப் போய் இருக்கிறேன், நடக்க முடியவில்லை“ அல்லது ஏதாவதொன்று ”என்னால் நடக்க முடியவில்லை. நான் - நான் மரிக்கின்றேன் அல்லது ஏதாவதொன்று நீங்கள் சொல்வீர்களானால் “நீங்கள் என்னைக் காப்பாற்றுவீரா? ”அவர் ''நான் ஏற்கனவே செய்து விட்டேன்“ பாருங்கள்? என்பார். இப்பொழுது, இது அவருடைய சத்தம் என்பதை எவ்விதம் நீ அறிந்து கொள்வாய்? ஏனென்றால் அன்று அவர் செய்தது போல ஏதாவதொன்றை அவர் செய்ய வேண்டும். அவரால் உன்னைக் குறித்து ஏதாவதொன்றை சொல்ல முடியும். நீ என்னவாயிருந்தாய் என்று சொல்ல முடியும் அல்லது உன்னிடத்தில் என்ன குறை அல்லது அப்படிப்பட்ட ஏதோவொன்று. வேதாகம காலங்களில் அவர் செய்தது போன்ற அது அவர் மாறாதவர் என்பதைக் காண்பிக்கும். ஆனால் சுகத்தைப் பெற நீ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிவிட்டோம்” நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உன்னுடைய தொல்லை என்னவென்பதை இன்றிரவு அவர் எனக்கு சொல்ல முடியும் என்று நீ விசுவாசிக்கின்றாயா? அல்லது நீ படுத்துக்கிடப்பதை குறித்து? நீ அதை ஏற்றுக்கொண்டு என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கின்றாயா? நீ அப்படி செய்வாயா? அவளுக்கு அருகில் உள்ள அந்த ஸ்திரீ, உன்னைக் குறித்தென்ன? உன்னுடைய குழந்தையின் மீது உன் கரத்தை வைத்துள்ளாய், நீ அதை விசுவாசிக்கின்றாயா? எத்தனை பேர் இதை விசுவாசிக்கின்றீர்கள்? (சபையோர் மகிழ்ச்சியோடு “ ஆமென் சொல்கின்றனர் - ஆசி) .... 85இப்பொழுதும், பரலோக பிதாவே இதோ உம்முடைய பணிவிடைக்காரன். நான் வெறுமனே ... நான் வெறுமனே உம்முடைய வார்த்தையைப் போதிக்க மாத்திரம் கடமைப் பட்டவனாயிருக்கிறேன். இப்பொழுது இது அசாதாரணமானது என்று நானறிவேன். ஆனால் நீர் இன்றிரவு இதை தந்தருள வேண்டுமாய் நான் ஜெபிக் கிறேன். அந்த ஜனங்கள் இதுவே சத்தியம் என்று அறிந்து கொள்வார்களாக. சரியாக இங்கே பாருங்கள், உங்கள் குழந்தைக்கு ஒரு வகை எலும்பு சம்பந்தமான வியாதியாயுள்ளது. அது சரி. அது காலில் ஒரு பெரிய வீக்கமாக உள்ளது. அது சரியா? உங்கள் கரத்தை அதன் மீது வைத்து மீண்டுமாக சொல். “கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய குழந்தையை சுகப்படுத்தும், என் வாழ்நாளெல்லாம் உமக்கு சேவை செய்வேன்”. இந்த தடுப்பு மருந்தை இது வரை ஒரு போதும் பெற்றிராவிட்டால், உன் முழு இருதயத்தோடு விசுவாசி. குழந்தையின் காலில் ஒரு கயிற்றைக் கட்டி, இன்றிரவு அதை அளந்து பார். இப்பொழுது முதல் நாளை இரவு வரை அது எவ்வளவு சுருங்கி இருக்கிறது என காண அந்தக் கயிற்றின் முறிந்த பாகத்தை கொண்டு வா. நீ அதை செய்வாயா? 86அங்கே அடுத்ததாக படுத்து கிடக்கும் நீங்கள் நான் அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? என் வாழ்க்கையில் நான் உங்களை ஒரு போதும் கண்டதே யில்லை . ஆனால் நீங்கள் மரணத்தின் நிழலில் படுத்திருக் கின்றீர்கள், அந்த ஸ்திரீயின் மீது ஒரு இருண்ட நிழல். அவள் புற்று நோயால் அவதிப்பட்டும் மரித்துக் கொண்டும் இருக்கின்றாள். அது அப்படியே சரி. தேவனால் உங்களை சுகப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? உங்களால் அதை விசுவாசிக்க முடியுமா? பிறகு மரிக்கும்வரை ஏன் அங்கு படுத்துக் கொண்டிருக்கிறாய்? மருத்துவரால் அதை குணப்படுத்த முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு போ? (சபையோர் மகிழ்ச்சியடைகின்றனர் - ஆசி) நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? விசுவாசிக்க விரும்பும் அனைவரும் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். எழுந்து உங்கள் கால்களால் நின்று தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் பாருங்கள்? பாருங்கள் ? நாம் ஒவ்வொருவரும் “தேவனுக்கு மகிமை” என்று சொல்லுவோம். நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் மகிழ்கின்றனர் - ஆசி) இப்பொழுது உங்கள் கரங்களை தேவனிடம் உயர்த்தி அவரை போற்றுங்கள். (சபையோர் மகிழ்கின்றனர்-ஆசி) நீங்கள் விசுவாசிக் கின்றீர்களா? கிலேயாத்தில் வேறே பிசின் தைலம் இல்லையோ? தேவனுடைய வல்லமைக்கு அதைச் செய்ய முடியும்! இப்பொழுது, விசுவாசிக்க போதுமான நம்பிக்கையும் ஒவ்வொருவரும், நம்முடைய கால்களால் எழுந்து நின்று கர்த்தருடைய நாமத்தில் விடுதலையை ஏற்றுக்கொள்வோ மாக. ஆமென். (சபையோர் மகிழ்கின்றனர்-ஆசி)